பக்கம்:இன்ப வாழ்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இன்ப வாழ்வு


இத்தகு சிறந்த கற்பொழுக்க முடைய புறாக் களுள்ளும், விதிவிலக்கு உடையவை சில இருக்கத்தான் செய்யும் போலும்! பெண் புறா உடன்படாது மறுக்கவும் வேற்று ஆண் ஒன்று அதனை வற்புறுத்துவதும் உண்டு. இது மக்கட் பதர்களிடமிருந்து கற்றுக் கொண்ட தீய பழக்கமாக இருக்குமோ!

ஆண் புறாவும் பெண் புறாவும் நிகழ்த்தும் காதல் களியாட்டுகள் கவர்ச்சியாயிருக்கும். அதுமட்டுமன்று; இரண்டும் தம் குஞ்சுப்புறாவுக்கு உணவூட்டும் அன்பிற்கு எல்லை யில்லை. இச் செய்திகளை யெல்லாம் பாவேந்தர் பாரதிதாசனார் அழகின் சிரிப்பு என்னும் நூலில் புறாக்கள் என்னும் தலைப்பில் பாடியுள்ள

“ஒருபெட்டை தன் ஆண் அன்றி

வேறொன்றுக் குடன் படாதாம்; ஒருபெட்டை மத்தாப்பைப் போல்

ஒளி புரிந்திட நின்றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை

வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட் டால்தான்

ஒன்றுமற் றொன்றை நாடும்.” ‘அவள் தனி ஒப்ப வில்லை;

அவன், அவள் வருந்தும் வண்ணம் தவறிழைக் கின்றால் , இந்தத்

தகாச் செயல் தன்னை, அன்பு தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒருசில தறுதலைகள் கவலைசேர் மக்களின் பால்

கற்றுக்கொண் டிருத்தல் கூடும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/63&oldid=550796" இலிருந்து மீள்விக்கப்பட்டது