பக்கம்:இன்ப வாழ்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இன்ப வாழ்வு


என்பதை நாம் மறத்தலாகாது. இஃது உண்மையோபொய்யோ! குரங்குகளின் வாயிலாகவாவது புலவர் நமக்கு நன்னெறியை வற்புறுத்தியுள்ளார் என்பது வரையிலும் தெளிவு இனி இறுதியாக யானைகளின் காதல் வாழ்வைப் பார்ப்போம்:

üJIT ář 6ôT

விலங்குகளுட் பெரியதாகிய யானைகளின் காதல் மனை வாழ்க்கை இலக்கியங்களுள் மிகவும் சுவையாகப் புனையப்பட்டுள்ளது. காட்டாக, முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இது, சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை முவேந்தரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்களாற் பாடப்பட்டதொரு நூலாகும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலில் சோழனைப் பற்றிய பகுதியில் யானை மறம்’ என்னும் தலைப்பில் இனிப்பும் காரமும் கலந்த பாடலொன்று நமக்கு அரிய பெரிய விருந்தளித்துக்கொண்டுள்ளது. அதனை நுகர்வோமே!

ஒருகால் சோழன் (கிள்ளி) பகைவர் மேல் படை யெடுத்தான். மதமும் கதமும் மிக்க களிற்று (ஆண்) யானைகளும் போருக்குப் புறப்பட்டன. எதிரியின் கோட்டை முற்றுகையிடப் பட்டதைத் தொடர்ந்து கடும் போர் நிகழ்ந்தது. சோழன் யானைகள் பகைவரது மதில் மேல் பாய்ந்து தம் கொம்புகளால் மதிலைத் தாக்கி யிடித்துத் தகர்த்தெறிந்தன. அதனால் தம் கொம்புகள் முறிபட்டதையும் அவை பொருட்படுத்தவில்லை. மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/73&oldid=550807" இலிருந்து மீள்விக்கப்பட்டது