பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 வருட காலம் மைசூர் மாநிலமெங்கும் பட்டி தொட்டி முதல் பெரு நகரங்கள ஈராக நடிக்கப் பெற்றது. இதே நாடகம் பினனர் தெலுங்கு மொழியில் பெயர்க்கப்பட்டு ஆநதிர மாநிலததில வெற்றிகரமாக நடிக்கப்பட்டது. இதனமூலம் இவரது புகழ்மணம் ஆந்திர மாநிலமெங்கும் வீசியதெனலாம். இந்நாடகத்தின் கரு புகழ்பெற்ற மகா பாரதக் கதையினினறும் எடுக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும் இவரது மற்றொரு படைப்பான நசாவதாரம்' நாடகமும், கனனட நாடக மேடைகளில் நெடுங்காலம் வெற்றி முழக்கமிட்ட நாடகமாகும. ஏழாண்டு காலம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்ற பெருமை இதற் குண்டு. இவர் தனது ஐம்பதாவது வயதில் தன் எழுதுகோலை நாடகத் துறையினின்றும புதினத் துறையை நோக்கித் திருப்பினார். இவரது முதல் சமூகப் புதினங்களான 'அபி சாரிகா'வும் சுதா மயி'யும் 1954ஆம் ஆண்டில் வெளி வந்தன. தொடக்கப் படைப்புக்களே இவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தன எனலாம. இந்த வெற்றிப் பெரு மிதத்தால் உந்தப்பட்ட இவர். புதினத் துறையில் தீவிர கவனம்செலுத்தலான சர். மூன்றாவதுபுதினப் படைப்பாக "ரூப லேகா வெளிவந்தது. இது ஒரு வரலாறறுப் புதின மாகும். புகழ்பெற்ற விஜயநகர சாம்ராச்சியத்தின் மாமன் னரான கிருஷ்ணதேவராயரது அரண்மனையில் காதலுக கும் வீரத்திற்கும் பகைமை எதிர்ப்புணர்ச்சிக்குமிடையே நடைபெற்ற போராட்டத்தை அழகுறச் சித்திரிப்பதாகும். இந் நாடகம், அவரை புகழின உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டதெனலாம். மிக உயர்ந்த வரலாற்றுப் புதினப் படைப்பு என கன்னட மொழிப் புலமையாளர் களாலும், சக எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர் களாலும் வாசகர்களாலும் புகழ்ந்துரைக்கப்பட்டது