பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 இதழில் தொடர்கதையாக அலை ஒசை வெளிவந்து கொண்டிருந்தபோதே அதனைக் கன்னடத்தில் மொழி பெயர்த்து, புகழ்பெற்ற கைைட இதழான சம்யுக்த கர்னாடகாவுக்கு அனுப்பினார். சிறந்த கதையம்சத் தோடு அழகான கன்னட மொழிப் பெயர்பையும் கணட அதன் ஆசிரியரும் புகழ்பெற்ற கன்னட எழுததாளருமான திரு ஆர் ஆர் திவாகர் இவரிடம மறைந்து கிடக்கும் இலக்கியத் திறமைகளைக் கண்டுணர்ந்து இவரை சம் யுக்த கர்னாட கா' இதழுக்குப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். உரிய இடத்திலிருந்து வந்த அழைப்பை உதறித் தள்ளாது ஏற்று அப்பணியைத் தன் எதிர்கால இனக்கியப் பணிக்குரிய ஆரம்ப நிலைக்கள னாகக் கொண்டு தன் இலக்கியத் தொண்டைத் தொடங் கினார். பதினொரு ஆண்டுகள் அவ்விதழின் ஆசிரியராக அமர்ந்து அருந்தொண்டாற்றினார். தமிழில் வெளிவநத அலை ஓசை'யின் கன்னட மொழி பெயர்ப்பு கன்னட மொழி வாசகாகளிடையே இவருக்குத் தனிச் செல்வாக்கை உருவாககித் தந்தது. இவரது அருமை யான மொழிபெயர்ப்பு,அஃது கன்னடத்தில் எழுதப்பட்ட மூலக்கதை போன்ற உணர்வையே பலரிடததும் உண் டாக்கியதெனலாம். இல்வெற்றிக்கு முழுமுதற் காரணம், கர்னாடக மக்களுக்கும தமிழ் மக்களுககும் இடையிலான வாழக்கை அமைப்புமுறை பழக்க வழக்கங்கள், எண்ணப் போக்கு ஆகியவற்றிற்கிடையேயுள்ள .ெ ந ரு ங் கி ய ஒற்றுமையோடு, இரு மொழிகளிலும் இவருக்கிருந்த நல்ல திறமையுமாகும். 'அலை ஒசை, மொழிபெயர்ப்பு வெற்றியைத் தொடர்ந்து இவர் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் அரிய படைப்புக்களைக் கன்னடத்தில பெயர்த்துத் தர ஆர்வத்தோடு முனைந்தார். இதுவரை பதினொரு தமிழ் மூல நூல்களை கன்னட வாசகர்களுக்குத் தநதுளார்.