உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 ரஷியன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவர் தம் வாழ்க்கையில் எண்ணற்ற இடர்ப்பாடு களைச் சந்தித்தவர். ஆசிரியராகவும் பத்திரிகையாளராக வும் சிலகாலம் பணியாற்றிய அவர் சிறிது காலம் அனைத் திந்திய வானொலியிலும் பணியாற்றினார். ஆனால் அவரது புரட்சிப் போக்கு எங்குமே அவரை நிரத்தரமாக தங்கவிடவில்லை. சிக்திமிக்கக் கவிதைகள் பலவற்றை ஈன்றெடுத்தார். புகழ்மிக்கக் கவிஞராக மட்டுமின்றி சிறந்த கட்டுரை யாளராகவும் நாடகாசிரியராகவும் திகழ்கிறார். அவரது வானொலி நாடகங்களின் தொகுப்பு 'மனோ பிரபஞ்சம் (மற்றோர் உலகம்) எனற பெயரில் வெளி வந்துளளது. அங்கதக் குறிப்புகளடங்கிய கட்டுரைத் தொகுப்பொனறு 'சரம் ராத்ரி (இறுதி இரவு) என்ற பெயரில் வெளிவந்தது. வாரம் வாரம்' என்பது மற் றொரு தொகுப்பு நூலாகும். தற்காலத் தெலுங்கு இலக் கியத் தந்தையாக ஆந்திரர்களால் போற்றப்படும் குரு ஜாடா அப்பாராவின் படைப்பாற்றலை விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு 'மன குருஜாடா' (நம் குருஜாடா) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. "சிறி சிறி முவ்வ’ (சின்னச் சின்ன மணி) என்ற நூல் அவரது நகைச்சுவைத் திறனுக்கும் 'கட்க சிருஷ்டி (கத்தி யின் படைப்பு) என்ற நூல் அவரது அங்கதப் பாடல் இயற்றும் ஆற்றலுக்கும் சான்றாக விளங்குவனவாகும். இவர் 1953-58ஆம் ஆண்டுகளில் ஆந்திரா இணைத் திருந்த அப்போதைய சென்னை மாநில மேலவை உறுப் பினராகவும் 1954ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோமில் நடை பெறற அமைதி மாநாட்டிலும் பங்கேற்றதோடு ஐரோப்