பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 என இன்றுங்கூட சிலர் முணுமுணுப்பது என்னவோ உண்மைதான. ஆயினும் ஒரு சிலர் எனணுவதுபோல அவை இலக்கிய மெருகை இழந்து விடவில்லை. பிற்காலப் படைப்புக்களில் இந்நிலை பெரிதும் மாற்றமடைந்துள் னது. இவரது இலக்கியப் படைப்புக்களில் ஆரம்பத்தில் காணப்பட்ட கொந்தளிக்கும் புரட்சியுணர்வு பிற்காலப் படைப்புக்களில் தெளிந்த சிந்தனையோடு தத்துவப் போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். காரணம் இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். பிரம்ம சமாஜத்தின் தீவிரவாதியாக இருந்து, பின்னர் அதினின்றும் விலகி தீவிர சமுதாய சீர்திருத்தவாதியாக, சமூக நீதிக்காகப் போராடும் புரட்சிக்காரராக, நாத்திக உணர்வு படைத்தவராகத் திகழ்ந்து பின் ரமண மகரிஷி யின் அரவணைப்பில் தத்துவக் கோட்பாடுகளுள் தம் சிந்தனையைச் செலுத்தித தெளிவு பெற்றவராகத் தம் எழுததுப் பணியைத தொடர்ந்தார். இவ்வாறு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அவரது படைப்பு களிலும் நாம் காண முடிகிறது. உண்ர்விலும் சிந்தனையிலும் பெரிதும் மாறிவிட்ட சலம் பிறகு ரமணாசிரமத்தில் சாதக"ரானார். ஆரம்ப நாட்களில தாம படைத்த புரட்சிக் கணல்தெரிக்கும் தமது இலக்கியங்களைப் பறறி சந்நியாச வாழ்க்கையை மேற் கொண்ட அவர் பூரிப்போடு "நான் உணமையைத் தேடிய முயற்சியில் அது ஒரு நிலை" என்றார். தெலுங்கு இலக்கியயுலகில் ஒருவிதப் புரட்சியுணர்வை யும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய சலம் தாழ்ந்து கிடந்த சமுதாயத்தின் எழுச்சிக்குப் போராடிய உத்வேகமிக்கக் கலைஞராக திகழ்ந்ததோடு இலக்கிய யுலகுக்கு விறுவிறுப் பூட்டிய நாடகங்களையும் கதை இலக்கியங்களையும் படைத்துத் தனக்கென தனியானதொரு அமரத்துவ இடத் தையும் பெற்றுக் கொண்டுள்ளார் என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.