பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மாமான்னர் ஷாஜகான் மும்தாஜ் மீது கொண்டிருந்த அளப்பரிய காதலையும், அந்த அமர காதலின் விளைவாக உருவான தாஜ்மகாலையும் பற்றிக் கூறும் 'முமத ஜ் மஹால் காப்பியமும், காந்தியடிகளைப் பற்றிய 'பாபுஜி' என்ற நூலும், நேதாஜியின் வீர வாழ்வை எதிரொலிக்கும் 'நேதாஜ் என்ற படைப்பும், ஸ்வப்ன கதா' (கனவின கதை)வும், நா கதா' (என் கதை) என்ற நூலின் இரு தொகுதிகளுக்கும் இவரது சிறு காப்பிய நூலகளுள் குறிப்பிடத்தக்கலைகளாகும். இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க அரிய படைப்பு "க்ருஸ்து சரித்ரா' (கிருஸ்து வரலாறு) என்பதாகும். இந் நூல் சாகித்திய அக்காதெமியின் பரிசு பெற்ற நூலாகும. திரு. ஜோஷ்வா கிருத்துவ சமயத்தைத் தழுவிய அரி ஜன வகுப்பில் பிறந்தாராயினும் இந்து சமயத்தில் காணும் சிறப்பியல்புகளையும். இந்தியப் பண்பாட்டின் உயர் அம்சங்களையும் அதியற்புதமாக உணர்ச்சிப் பெருக்குடன் புகழ்ந்துள்ளார் பாரத ஒருமைப்பாட் டுணர்வை உயிர் மூச்சாகக்கொண்ட இவர். தான் சார்ந்த கிருத்துவ மக்களிடையேயும் பாதிரிமாாகளிடையேயும காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டவும் தவற வில்லை, தற்கால தெலுங்குக் கவிதை வளர்ச்சிக்குக் கணிச மான பெருந்தொண்டாற்றியுள்ள திரு. ஜோஷவாவை அரசும் மக்களும் பல வகையிலும் போற்றிச் சிறப்பித துள்ளனர் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண' விருதையும் ஆந்திரப் பல்கலைக் கழகம் ‘கலாப்ரபூர்ணா பட்டத்தையும் மக்கள் கவி கேர்கிலா' (கவிக்குயில்), 'நவயுக கவிச் சக்ரவர்த்தி' என்ற பட்டங்களையும வழங் கியதோடு கனகாபிஷேக்'மும் செய்து பெருமைப் படுத்தி புள்ளனர், குண்டுர் மக்கள் தங்கள் அபிமான கவிஞருக்