பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கவிதைப் படைப்பு ஆங்கில நாட்டின் பெருங்கவிஞர் கிரே அவர்களின் 'இடுகாட்டு இரங்கற்பா'வைவிட ஒருபடி உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. இவரது சிறு கவிதைகள் ஐந்து தொகுப்புகளாக-ஒல் வொன்றும பல பதிப்புகளாக-வெளிவந்துள்ளன. இவர் சிறு காவியங்கள் பல எழுதியுள்ளார். அவற் றுள் குறிப்பிடத்தக்கது கப்பிலமு (வெளவால்) என்ப தாகும், சிறு தொகுதிகளாக வெளிவந்துள்ள இச் சிறு காவியம் புது வகையில் அமைந்த தூது இலக்கிய வகை யைச் சேர்நததாகும. அரிஜன் ஒருவனது குடிசைக்கு வரும் வெளவாலிடம் சிவன கோயிலின இருண்ட மூலைககு மீண்டும் அது திரும்பிச் செல்லுமபோது. அங்கே குடி கொண்டிருக்கும் சிவபெருமானிடம் பூசாரி இல்லாத நேரம் பாாதது அரிஜனாக தான பிறந்து அடைந்துவரும் இன்னல்களை, அவல வாழ்வை எடுத்துக் கூறுமாறு தூதனுப்புகிறான் கீழ்க்குடி மக்களின் துயர வாழ்வை அறபுதமாகப் படம் பிடித்துக காட்டி படிப்போர் உள்ளததை உருக்கி விடு கிறார். காளிதாசரின் மேக தூத பாணியில் அமைந்த இத் தூது இலக்கியம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். மற்றொரு சிறப்புமிகு காவியம், பாரசீக கவிஞர் பிர் தெளஸியின் வாழ்வைத் சித்தரிக்கும் பிர்தெளஸி' எனும காப்பியமாகும். அரசனது கைவாள் குருதியைக் கொட்டும் கவியின் எழுதுகோல் அமுதததைப் பொழியும் அரசன் உலகத்தைததான் அரசாள முடியும். ஆனால் கவிஞனோ இம்மையையும் மறுமையையும், அரசாளும் ஆற்றல் பெற்றவன்' எனச் செங்கோல் ஏந்தும் அரச வாழ்வின் நிலையையும், எழுதுகோல் பிடிக்கும் கவிஞர் களின் உணர்வையும் சிறப்புற விளக்குகிறார்,