பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அலங்கரித்த மாலை கூறும் கூற்றாக அமைந்தது இக் காவியம் இவர் மூலப் படைப்பாகவன்றி மொழி பெயர்ப்பாக வும் பல பல நூல்களை தெலுங்கு புததிலக்கிய உலகுக்கு அளித்துளளார் மொழி பெயர்ப்பு நூல்களுள் குறிப் பிடதக்கவை சம்ள கிருதத்தினினறும் பெயர்க்கப்பட்ட கதா சரித் சாகரம், பாலி மொழியிலிருந்து பெயர்க்கப் பட்ட புத்த ஜாதகக் கதைகள்' வங்காள மொழியினின் றும் மொழி பெயர்க்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் கோரா' மற்றும் இந்தியிலிருந்தும சில புதினங்களையும் மொழி மொழி பெயர்த்துள்ளார். கதை, கவிதை, நாடகம் காவியம், கட்டுரை, திறனாய்வு பற்றி இருபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வினபோது வெளியிடப்பட்ட மலர் இவரது அரிய கட்டுரைகளையும் படைப்புகளையும் தாங்கி சிறப்புமிகு பெருமலராக வெளிவந்தது. இலக்கியத்துறையில் தனி முத்திரை பதித்து வந்துள்ள சிவசங்கர சுவாமி விடுதலைப் போராட்டத்தில் பேரார் வத்தோடு ஈடுபட்டு உழைத்தார். அதற்கு உறுதுணை யாகத் தன் எழுத்தாற்றலையும் பயன்படுத்தினார் பல முறை சிறை வாழ்க்கையையும் மேற்கொண்டிருக்கிறார். எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் இவர் இன்றும் இளமைத் துடிப்புடனேயே இருக்கிறார். இளமை தொட்டே தர்க்கம், வேதாந்தம், அத்வைதம் போன்ற தத்துவத் துறைகளில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்த இவர் தமது அறுபதாவது வயதில் சந்நியாசம் மேற் கொண்டு குண்டுருக்கருகில் உள்ள ஒங்கோலைச் சேர்ந்த வேட்பாலம் என்னுமிடத்தில் அமைநதுள்ள ஆசிரமத்தில்