பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இப்படைப்பு இன்றைய வாழ்வியல் போக்கை வசன காவியம போல் விணடுரைக்கிறது 'பூமியைத் தனியே விட்டுப் பிரிய இயலாத ஆவி அலை வது போன்று இவ்வுலகம் அலைகிறது. பழைய நெறி மடிந்து விட்டது.புதிய அறநெறியோ இன்னும் பிறக்கவே இல்லை. கவலையின் முடிவு எப்போது:" எனக் கூறும் இவர் இன்றைய வாழ்வின போக்கை அப் பட்டமாக பினவருமாறு கூறுகிறார்: "வாழ்க்கை என்பது என்ன? அடி தவறி விழுதல், தள்ளாடி எழுதல், தீனி தின்பது கசப்பு மருந்து குடிப்பது அவசரத்தில் அறிவை இழந்து, தவறைச் சரியென்று சாதிப்பது. இவ்வளவுதானே!" என இடித்துக் கூறுகிறார். இவரைப் போனறே ராஜரத்தினமும் புதுமை இலக் கிய வளர்சசிக்குப் பெருந்துணை புரிநதவர். வாழ்க்கை பின் தாழ்ந்த தட்டில் தடுமாறிக் கொண்டிருக்கும் மக் களின் வாழ்வை அவர்தம் போக்கில் திறம்படச் சித்தரிப் பதில் வல்லவராக விளங்குகிறார். இவரது படைப்பில் கருத்து, நடை, ஆழம் அனைத் திலும் புதுப்போக்கைக் கையாண்டுள்ளார். இவரது கவிதைகளில் ஒனறில் குடிகாரனின் கண்ணுக்குச் சநதிரன குடிததுவிட்டு ஆடுவதுபோல் தெரிகிறதாம. தெரு விளக்கு களும் குடிமயக்கத்தால் தலைகீழாக எரிகினறனவாம். இத்தனை குடிகாரர்களுக்கு மத்தியில் தான இருப்பது அவமானம் எனக் கருதி மீண்டும் கள்ளுக் கடைக்கே சென்று விடுகிறானாம். குடிகாரனின் இயல்பை எடுத்துக் கூறுவதுபோல் மனித விகார குணங்களை வெளிப்படுத்த முயலகிறார்.