பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 களாகும். இவர் "மந்திர வித்தை' எனும் தமிழ் நூலை கடுகுலோ காரடி' என்ற தலைப்பில் தெலுங்கில் மொழி பெயர்த்தார். இந்நூல் மொழி பெயர்.பபுச் சிறப்பிப்ை பாராட்டி ஆந்திர மாநில அரசு இவருக்கு தனிப பரி சளித்து பாராட்டியது. இந்நிகழ்ச்சியொன்றே இவரது மொழிப் பெயர்ப்புத் திறனுக்குத் தக்க சான்றாகும். பிற மொழியினின்றும் தாய்மொழிக்குப் பெயர்ப்பது அவ்வளவு கடினமானதன்று, எளிதுங்கூட. ஆனால் தாய் மொழியிலிருந்து, பிற மொழிகளில் பெயாப்பது மிக மிகக் கடினம என்பது அனுபவ உண்மை. ஆனால் இதற் கும் டாக்டர் சரி மா விதி விலககாக உள்ளார். தெலுங்கு எழுத்தாளர்களில் சாம்ராட்டாக விளங்கிய திரு விஸ்ல நாத சத்தியநாரயணாவின் "வேயி படகலு' எனனும் ஆயிரம பக்கங்களுள்ள புதினத்தை சிறிய வடிவில் மூலச் சுவை சிறிதும் குன்றாது "ஆயிரம் தலை நாகம்' என்ற பெயரிலேயே தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு என்ற உணர்வு சிறிதும் உணடாகவாறு மூல நூல போன்றே இஃது அமைந்திருப்பது இவரது தமிழ் எழுத்தாற்றலைப் புலப்படுத்துவாக உள்ளது. தமிழிலுள்ள இலக்கிய வளத்தை தெலுங்கு நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதையும் தாய்மொழியான தெலுங்கில் இலக்கியச் செல்வங்களை தமிழிலே எடுத்துச் சொல்வதை யும் ஒரு தொண்டாகக் கருதி பணியாற்றும் இவரது முயற்சிகளைப் பாராட்டி 1960இல் நடைபெற்ற எட்டா வது தமிழ் எழுத்தாளர் மாநாடு இவருக்கு கேடயமளித் துச் சிறப்பித்தது. எல்லாவற்றிற்கும் சி க ம் வைத்தாற்போன்ற பணியை கடந்த சில மாதங்களாக ஆற்றி வருகிறார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி கல்கி ஈராக 25-க்கு மேற்பட்ட தமிழ் சான்றோர்களின் இலக்