பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 விஞ்ஞான மொழியில் பேசுவது சுவையானதாகும் மற் றும் ஸாஹித்ய கெளதுகம்', 'சூரிய காந்தி’, ‘நிமிஷம்" 'வனநாயகன்", "செங்கதிர்கள்', 'பதிகன்டே பாட்டு’ (வழிப்போக்கன் பாடல்) ஒடக் குழல்', 'அந்தர்ஹாம்" (உள்ளத்து வேட்கை) வெள்ளிப் பறவை', 'பாதேயம்' (வழிச் சோறு) முதலிய கவிதைத் தொகுப்புகளை வழங்கி யுள்ளார். இருளினு முப்பு’ (இருளுக்கு முன்பு) ஆகஸ்ட் 15' 'சந்த்ய (மாலைப்போது) ஆகிய நாடகங்களும், 'கத் யோபஹாரம் லேக மாலா முத்துச் சிப்பி' "ராக் குயில் கள் ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்புகளும் 'இராதா ராணி ராஜ தநதிணி' ஆகிய இரண்டு கதைத் தொகுதிகளும் குறிப்பிடத்தக்க படைப்பு களாகும். இவற்றுள் ஒடக் குழல் கவிதைத் தொகுப்பு 1966ஆம் ஆண்டு பாரதீய ஞான பீடத்தின் ஒரு இலட்சம் ரூபாய் சிறப்புப் பரிசைப் பெற்றது. ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்த காலத்தில் இவர் எழுதிய பாட நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை களாகும். அவை இன்றும் கேரளப் பள்ளிகளில் பாடப் புத்தகங்களாக மாணவர் கரங்களில் தவழ்ந்து அறிவுச் சுடர் கொளுத்தி வருகின்றன. உணர்ச்சி பொங்க நீண்ட நேரம் சொல்லாட வல்ல நாவலரான இவரது தலைமையின்கீழ் ஸாஹித்ய பரிஷத்' எனும் இலக்கிய அமைப்பு பெரும் பயன் ஈட்டியது என லாம். நீண்ட காலம் ஆசிரியத் தொண்டும். குறுகிய காலம் அனைத்திந்திய வானொலியிலும் பணியாற்றி ஒய்வு பெற்ற சங்கர குறுப்பு மாநிலங்களவை உறுப்பின ராகவும் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் தொடர்பு கொண்டும் பணியாற்றியுள்ளார்.