பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 கவிஞராகப் பரிணமிக்க காரணமாயமைந்தவைகளில் மிக முக்கியமானது தாகூரின் கவிதைப் படைப்புகளாகும் 'அன்வேஷணம்’ (தேடுதல்) 'மங்கள கீதம் 'சாக்ஷாத் காரம் முதலிய கவிதைப் படைப்புகள் இதற்குத் தக்க சான்றுகளாகும், மாலையில் எழும் நிலவு உதய நட்சத்திரம், செக்கர் வானம், வைகறைப் பொழுது, மேகங்கள், கடல், மலை ஆகிய அனைத்தையும் தம் கவிதைகளில் குறிப்புப் பொருள் களாக-மனிதனின் ஆத்மாவோடு தொடர்பு கொணட குறியீடுகளாக இவர் தம் கவிதைகளில் திறம்பட வெளிப் படுத்துவதன் மூலம் சிறந்த ஸிம்பாலிக்" (உருவக) கவி ஞராகவும் உள்ளார். இந்தியக் கவிஞர்களிலேயே ஒரு யுகக் கவிஞர்களாக தாகூரையும கவி சுப்பிரமணிய பாரதியாரையும் கருதும் சங்கர குறுப்பு தாகூரின் கீதாஞ்சலியை மூலத்திலிருநது நேரடியாக மொழி பெயர்கக எணணித் தமது 55ஆம் வயதில் அங்கமொழி பயினறு "கீதாஞ்சலி'யை மலை யாளத்தில் பெயர்த்தார். இவரது புகழ்பெற்ற மலையாள மொழி பெயர்ப்புக் கவிதை நூல்களில் குறிப்பிடத் தக்க வை உமர்கய்யாமின சிறநத கவிதைகளின மொழி பெயர்ப்பான 'விலாச லஹரி'யும் காளிதாசனின் மேக தூத'த்தின மறு உருவான மேக சந்தேசமும் ஆகும். இவர் வெறும் தத்துவக் கவிஞர் மட்டுமல்லர் நாட்டுப்பற்றில் இமயம்போல் விளங்கும் இவர் சமுதாயக் கோணல் நிலைகளைத் தம் கவிதைகளில் சாடத் தவறி யதேயில்லை. இவரது படைப்புகளில் பொதுவுடமை உணர்வும் விஞ்ஞான உணர்வும் பொங்கி நிற்பதைக் காணலாம். 'அம்மாமன் ஆசீர்வதிக்குந்து (மாமன் ஆசீர் வதிக்கிறார்) என்ற படைப்பில் இரு பாத்திரங்களான உலகமும் சந்திரனும் விஞ்ஞான விளைவுகளைக் குறித்து