பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாகவி ஜி. சங்கர குறுப்பு 'ஜி' எனற சிறப்புப் பெயரால் இந்தியாவெங்கும் நன்கு அறிமுகமாகியுள்ள மகாகவி ஜி. சங்கர குறுப்பு இன் றைய மலையாளக கவிஞர்களிடையே குறிப்பிடத்தக்க சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழும் பெருங் கவிஞராவார். இயற்கை வளங்கொழிக்கும் காலடிக்கருகிலுள்ள கிராமமொன்றில 1901ஆம ஆணடு பிறந்த சங்கர குறுப்பு இளமை முதலே இயற்கையின வயப்பட்டவராக-இயற்கை யின் இரகசியங்களை அறியும முயறசியுடையவராகஆரம்ப நாட்களில் இயற்கையின் பேரெழிலை படைப்பு இரகசியங்களை அடிததளதாகக் கொண்ட கவிதைகளைப் புனைந்தார். வெறும் இயற்கை நலம பாராட்டும் கவிஞ ராகவே தாம் அமைந்து விடாது, இயற்கையின் தன்மை களை வாழ்க்கையின் ஆத்துமப் பிரச்சினைகளோடு இணைந்துப் பாடும் தத்துவக் கவிஞராகப் பின்னர் மலர்ந்தார். மலையாள மொழியில் வித்துவான் பட்டம் பெற்று ஆசிரியத் தொழிலை மேற்கொண்ட கவிஞர் ஆங்கில மொழியையும் தாமே படித்து விரைவில் புலமை பெற் றார். அதன் விளைவாக அவரது கவிதையாற்றல் பன் மடங்கு விரைந்தது மேனாட்டுக் கவிஞர்களில்ஷெல்லியின் செல்வாக்கும் இந்தியக் கவிஞர்களில் தாகூரின் செல்வாக் கும் பிற்காலததில் இவர் கவிதைகளில் பெரிதும் எதி ரொலிக்கத் தொடங்கின. கற்பனையே கவிதைககு அடித் தளம் எனற நிலைமாறி, கருத்தும் சிந்தனையுமே கவிதை யின் உயிர்நாடி என்ற அடிப்படையில் இவரது கலிதைப் படைப்புகள் வெளிவரலாயின. இயற்கைத் தத்துலங்களை இம்முறையில் வெளிப்படுதத முயலும் சங்கர குறுப்பு மிகச் சிறந்த "மிஸ்டிக் கவிஞராவார். இவர் "மிஸ்டிக்