பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 என்று என் வாசகர்கள் கூறுகிறார்கள். நான் அதை எதிர்க்கவில்லை. வா ச க ர் க ள் விருப்பப்பட்டால, தொடர்ந்து வாசிப்பார்களேயானால்-நான் எழுதுவது இலக்கியம இல்லை எனறாலும கூடதான மிகவும் திருப்தி யடைவேன். ஏனென்றால் என் சிந்தையையும் செயலை பும் கற்பனையுடன வாசகர்களுக்குக் கைமாற்றம் செய்து தருகிறேன எனபதில்தான் என திருப்தி, ஆசை, ஆர்வம் எல்லாமே இருககிறது" எனக் கூறியுள்ளார். கேசவ தேவ் புதினப் படைப்புகளைப் போன்றே சிறு கதை இலக்கியத் துறையிலும் தன் தனி முத்திரையைப் பதித்துள்ளார் எனலாம். கடடுக் கோப்பான நிகழ்ச்சித் தொடர்களின் அமைப்பும் கதையை வளர்த்து விரித்துச் சொல்லும் போக்கும் முடிவும் பொருத்தமும் இவரது படைப்பாற்றல் திறனுக்குக் கட்டியங் கூறுபவைகள என லாம். உயிரோட்டமும் அழகும் ஒருங்கே கொண்ட இவரது சிறுகதைப் படைப்புகளுள் 'ப்ரவாகம் உஷஸ்' "சித்திர கால அனைத்தே நாடகம் (அன்றைய நாடகம) "ஜீவித சக்கரம் பாவி வரன" (எதிர்கால மாப்பிள்ள்ை) முதலிய சிறுகதைத் தொகுப்புகள் சிறநதவைகளாகும். நாடகத் துறைக்கு இவர் ஆற்றியுள்ள பெரும்பணியை எக்காரணம் கொணடும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது நீண்டகாலமாக நாடகக் குழுக்களில் பணி யாற்றியதனால் பெற்ற அனுபவங்களைக் கொண்டு புதிய புதிய உத்திகளைக் கையாண்டு நாடகங்கள் பலவற்றைப் படைத்து வெற்றி கனடுள்ளார். இவரது நாடகங்களுள் "முன்னோட்டு (முன்னேற்றப் பாதையில்) மத்ய பானி: (குடிகாரன்) ப்ரதான மந்திரி (பிரதம மந்திரி) போனற வைகள் குறிப்பிடத்தக்கனவாகும் மற்றும் ஒரங்க வானொலி நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.