பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இலக்கியச் சடங்குகள் ஏதுமில்லாத நிலையில் நேரடி யாக மக்களின் உணர்வுகளை வருடும் புதுக்கவிஞர் போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கு வதில் ஆச்சரியமில்லை. தெலுங்குப் புதுக்கவிஞர்களில் பலர் பாடும் புதுக் கவிதைகளின் மரபு அமசங்கள் அப்படி அப்படியே இடம் பெற்றிருக்கின்றன. பழைய யாப்பில் புதிய கருத்துக் களை அமைத்துப்பாடும் கவிஞர்களும் தெலுங்குக் கவிதை யுலகில் இருக்கவே செய்கின்றனர். 'உள்ளத்து உள்ளது கவிதை உண்மை உருவெடுப்பது கவிதை' என்ற கவிமணியின் வாக்குக்கொப்ப உண்மை கவித்துவம் உணர்ச்சியோடு வெளிப்படும்போது, அதற்குரிய வடிவத் திலேயே அது வெளிப்படும் என்பது அனுபவ உண்மை யாகும். பழைய சந்தமோ வடிவமோ பிடிக்காத புதுக் கவிஞர் களில் பெரும்பாலோர் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதை எழுதி வருகிறார்கள். அதனால் இலக் கண விதிகளுக்கு மாறுபட்ட சொற்களும் மரபுக்கு மாறுபட்ட உவமைகளும் இவர்களது பாடலகளில் இடம் பெற்றிருப்பதில் வியப்பில்லை. புதுப் புதுக் கருத்துக் களுக்கு புதிய எளிய சொற்களே போதும் எனபது இவர் களின் கருத்தாகும். புதுக்கவிதைக்குப் புலமையாளர்களிடையே போதிய ஆதரவில்லாவிட்டாலும் வளர்ந்துவரும் இளந் தலை முறையினரிடையே நல்லாதாவைப் பெற்று வருகின்றது. வார, மாத, நாளேடுகளும் நல்லாதரவும் தந்து வருகின் றன. புதுக்கவிஞர்க்கு புதுப் பெயரிடுவதிலேயே இப் புதுமைக்கவிஞர்கள் இன்னும் ஒன்றுபட்டதாகத் தெரிய