பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திறனாய்வு என புதிய இலக்கிய வடிவங்களில் தெலுங்குப் படைப்பிலக்கியங்கள் உருவாயின. இதுவரை புராண நாயகர்களும் அரச குலததவர்களுமே இடம் பெற்றுவந்த இலக்கியங்களில் அரசியல தலைவர்களும் மக்களும் உலவத் தொடங்கினர் மக்களின் உணர்வுகளை மெல்லிய நூலி ழைகளாக வெளிப்படுக் தும் கருவிகளாக இலக்கியங்கள் மலர்ந்தன. இதற்கு ஆங்கில மொழியோடு வங்கமொழிச் செல்வாக்கும் பெருங்காரணமாயமைந்தது எனலாம். பழைய மரபுகளை உதறிததள்ளி இயற்கையான போக்கில் கவிதை வடிக்க கவிஞர் குழாம் தோன்றியது பாவ கவுலு" எனத் தங்களை அழைத்துக் கொண்ட அலர்கள் தங்கள் கவிதை இலக்கியப் போக்கை பாவ கவித்வமு' எனப் பெருமையோடு அழைத்துக கொண டார்கள் இப்போக்கு தேசியப்பற்று மககளின உள்ளத்தில் அழுத்தமாகக் காலூன்ற பெருந்துணை புரிநதன என ☾h IᎢᏓly , சமுதாய மேடுபள்ளங்களை-ஏற்றத் தாழ்வுகளை பிரத்தியட்ச உணர்வோடு மக்களுக்கு உணர்தத புதிய முற்போக்குக் கவிஞர் குழாம் உருவெடுத்தது பூரீயூரீ (யூரீரங்கம் பூரீனிவாச ராவ்) வித்வான் விஸ்வம், ஆருத்ரா, தா ச ர தி போனறவர்கள் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டு வளர்தது வருப வர்கள் ஆயினும. மரபுப் போக்கு அடியோடு அழிந்து போகாவண்ணம் காக்கும் பணியில், பாரதீய ஞானபீட பரிசு பெற்ற மகாகவி விஸ்வநாத சத்திய நாராயண போனறவர்கள் தொடர்ந்து பாடுபடடு வநததை இனறும் அவரொத்த பலரும் முயன்று வருவதை மறுப்பதற்கில்லை மரபுக் கவிதைப் போக்கைவிட புதுக் கவிதைப் போககு இன்றைய தெலுங்குக் கவிதையுலகில் அதிக வலுவோடி ருக்கிறதெனலாம.