பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 இலக்கிய திறனாய்வுத் துறையும் தெலுங்கு இலக்கிய உலகில வலுவாக வேரூனறி வளர்ந்து வரும் துறையாகும். இலக்கிய வளாச்சியில் இலககிய இதழ்களின பங்கைக் குறைத்து மதிப்பிட்டு விட இயலாது. சிறுகதை, புதினம், கவிதை என இலக்கியத்தில் எத் துணை வகைகள் உண்டோ அதே போன்று எல்லா வகை களிலும் சிறுவர் இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன. ஒரு கால கட்டத்தில் புராண இதிகாச கம்பவங் களைக கதைகளாக சிறுவர்க்கு ஏற்றபடி எழுதப்பட்டி ருந்த போதிலும் காலப போக்குக்கேற்ப அவற்றின் கருவும் உருவும் சமுதாயச் சூழ்நிலைகளின தனமைக் கேற்பப் படைக்கப்பட்டன. வீரேசலிங்கத்தை முன்னோடியாகக் கொண் டு எழுந்த சிறுவர் புத்திலக்கிய வளர்ச்சிககு ஜி. வி. சீத்தா பதியை ஆசிரியராகக் கொண்ட 'பாரதி மாத இதழ் சிறு வர்களுக்கென முதன்முறையாகச் சில பக்கங்களை ஒதுக் கியது. பாலானந்தம்' என்ற தலைப்பில் சிறுவர்க்கான கதை, கவிதைகள வெளியிட்டு சிறுவர் இலக்கிய வளர்ச் சிக்கு உதவியது. அதன் பிறகு என் ராகவராவ் ஆசிரிய ராயிருந்த பாலர், மாத இதழ் முழுக்க முழுக்க சிறுவர் களுக்காகவே வெளி வந்தது. அதைத் தொடர்ந்து பால மித்ரா' போன்ற பல இதழ்கள் சிறுவர் இலக்கிய வளர்ச் சிக்கு உழைக்கலாயின. சிந்தா தீட்சிதுலு முதன முதலாக "வீலா சுந்தரி' என்ற சிறுவர் புதினததை எழுதி வெளி யிட்ட மெருமைக்குரியவராவார். சிறுவர் இலக்கியத் துறையில் அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர்களில் விசா அப்பா ராவ், ஏ. வி. எஸ். ராமாராவ், வி வெங்கடப்பையா, ஜே. ராம கிருஷ்ணா போன்றோரைக் குறிப்பிடலாம்.