பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 யெல்லாம் ஒன்று சேர்த்து, அவர்கள் திறமையைக் கட்டுக் கோப்பாக வளர்ப்பதன் மூலம கன்னட இலக்கியத் துறை யின் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம் என எண்ணிய திரு. பேத்ந்ரே "கெளயர குப்பு' (நண்பர் குழு என்ற எழுத்தா ளர் குழாமை உருவாக்கினாா. இதன் மூலம் ஒருமுகப் படுத்தப்பட்ட எழுத்தாளர்கள் பலரும் ஆக்க வழியில் தம் இலக்கியப் பணியைக் கட்டுக்கோப்பாக்க முடிந்தது. கனனட இலக்கிய வரலாற்றில் இந்நிகழ்ச்சி குறிப்பிடத் தக்க ஒரு சிறப்புச் செயலாகவே கருதப்படுகிறது. தார்வாரிலுள்ள மகாராஷ்டிர அந்தணர் குடும்ப மொன்றில் 1896ஆம் ஆண்டில் பிறந்த பேந்த்ரே கன்னட மொழிப் பேராசிரியராகப் பல்லாண்டு காலம் பணி யாற்றி ஓய்வு பெற்ற நிலையில் அமைதியாக இலக்கியத தொண்டாற்றத தவறவில்லை. இளமை முதலே இலக்கியத் துறையில் புத்தார்வமும் புதுமை யுணர்ச்சியும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவராக விளங்கும் இவர் தலை சிறந்த கவிஞர், கட்டுரையாளர் நாடகாசிரியர், படைப்பளார் எனற பலதுறைத் தகுதியும் மிக்கவராக விளங்குபவர். இலக்கியத் துறைகள் அனைததி லும் இவர் தம கைவண்ணத்தைக் காடடியிருப்பது போன்றே இவர் தம் கவிதைகளில் கருவாக அமைத்துப் பாடாத பொருளேதும் இலலை எனறு கூறுமளவுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் கவிதைகளை எழுதிக் குவித்துள்ளார். இலைமறை காயாக இலக்கியப் பணியாற்றி வந்த இவரைக் கன்னட மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள பெருந்துணையாயமைநத நூல் ஹக்கி ஹாருத்திடே" (பறவை பறக்கிறது) என்ற கவிதை நூலாகும் 1930ஆம் பெல்காமில் நடைபெறற 'கவி சம்மேளன. மொன்றில்