பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இவரது காதல் கவிதைகள் வெறும் உணர்ச்சியை அடித்தளமாகக் கொண்டமையாது கருத்தாழம் மிக்கவை களாகவும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க தாகும் புட்ட விதவே" (இளம் கைம்பெண்) ஹெனத ஹிந்தே" (பிணத்திற்குப் பினனால்) முதலிய கவிதைப் படைப்புக்களின் வாயிலாக சமுதாய பிற்போக்குத்தனங் களையும் பெண்களின துயர உணர்ச்சிகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார். துத்தின சீல (சோற்றுப் பை) என்ற கவிதையின் மூலம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிச் சிதையும் வறுமையை எதிர்த்துச் சங்கநாதம் முழங்குகிறார் குருடு காஞ்சனா போன்ற பாடல்களின் மூலம் சமுதாயத்தைச் செல்லரித்து வேற்றுமையுணர்ச்சி 'களுக்கு விததாக விளங்கும் ஏழை பணக்கார வேறுபாடு களை எதிர்த்துப் புரட்சிக் கீதம முழங்குகிறார். நிலப் பிரபுத்துவ ஆதிக்கப் போக்கையும் ஏழைகளின் வியர்வை யில இன்பங் காணும செல்வர்களின் கொடுமைகளையும் விளக்கியுள்ளதன மூலம் இவரது பொதுவுடைமை உணர் வைத தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இவரது சிறு காவியமான சசி கீதா' (காதலியின் கவிதை) நடைச் சிறப்பும் கவர்ச்சியும் கொண்ட புகழ் பெற்ற நூலாகும் ஒரு வகையில் இந்நூல் அவரது வாழ் வின் எதிரொலி என்று கூடக் கூறலாம் மண வாழ்வி லிருந்து அவர் தனது வாழ்க்கையில் அடைந்த இன்னல் களையும் எதிர் நீச்சல்களையும் இதமாக எடுத்துச் சொல் லும் வாழ்க்கை நூலாகும். கன்னட நாட்டில் தேசிய உணர்ச்சி பொங்கியெழ உறுதுணை புரிந்த கவிதைகளில் இவரது படைப்புகளுக்கு கணிசமான பங்குண்டு என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாததாகும், நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றி சமூக நீதிக்காக