பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது இரண் டாவது கவிதைத் தொகுப்பான ஓம அஷாந்தி தத்துவக் கருததுக் கோவையாகவே அமைந்தது. இவர் சிறுகதைத் துறையிலும் தன் கைவண்ணத்தைக் காட்டியுளளார். கனசி ைகெளதி (கனவுக் காதலி) என்ற தொகுப்பில் காணும் கதைகளில் பல சிறந்த கதையம்சம் கொண்டு விளங்குகின்றன. இக்கதைகளில் காணும் மற் றொரு சிறப்பம்சம நகைச்சுவையோடு கதைகளை நடத்தி செலவதாகும் உள் மனத்தைத் தொடவல்ல சோக உணர் ஆட்டும் கதைகள் பலவும் இததொகுப்பில் இடம் பெற் றுள்ளன இவர் படைத்த நாடகங்கள் பலவும் சாதாரண மக் களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டு எழுதப்படடவைகளாகும். சேவா ப்ரதீபா" (தொண்டெனும ஒளி), மனோராஜ்யா நாமதாரி' (பெயர் பெற்றேன்) போன்ற நாடகங்களில் நகைச்சுவை யும் கேலிக்குறும்புகளும் இரண்டறக் கலந்துள்ள நிலையில் சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களின் வாழ்க் கைப் பிரச்சினைகளை அலசுகின்றன. டாக்டர் முகளி கவிஞர், புதினப் படைப்பாளர் நாடகாசிரியர் சிறுகதை எழுத்தாளர் என்ற சிறப்புக்களை விட தலைசிறந்த கன்னட இலக்கியவுலகத் திறனாய் வாளர் எனற பெருஞ் சிறப்பாலேயே இன்று போற்றி மதிக்கப்படுகின்றார். கல்வி கற்ற காலத்திலும் வெலிங்டன் கல்லூரியில் கன்னட மொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய காலத் திலும் இவர் திறனாய்வு உணர்வோடவே இலக்கியங் களை நோக்கினார். திறனாய்வுத் துறையில் ஆழ்ந்த புலமை படைத்த டாக்டர் முகளி கன்னட இலககியத