பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii


petrol engine ; பாறை நெய் எந்திரம் (20) பெட்ரோல் எந்திரம் (2,13,23)

சில கலைச்சொற்களில் புணர்ச்சி விதிகள் பின்பற்றப்பட்டுள்ளான. காட்டாக வார்ப்பிரும்பு (22) என்ற சொல்லும் வார்ப்பு இரும்பு (29) என்ற சொல்லும் cast iron என்பதைக் குறித்து நிற்கின்றன. ஒரே ஆங்கிலக் கலைச்சொல்லுக்குப் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. arc என்பது பல்வேறு முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

fulcrum  ; சுழல் மையம் (2), சுழலகம் (2), ஆணல் புள்ளி (6), ஆதாரப் புள்ளி (5)

இக்கலைச்சொல் தொகுப்பு தரப்பாட்டுப் பணிக்கு மிகவும் துணை செய்யும். ஒரே ஆங்கிலத் கலைசொல்லிற்கு இணையாகத் தரப்பட்டுள்ள பல்வேறு தமிழ்க் கலைச்சொற்களுள், மிகப் பொருத்தமான ஒன்றைக் கண்டறிய இயலும். அன்றி ஒரே கலைச்சொல் பல மூலங்களிலும் காணப்பட்டால் வழக்குக்கு முதன்மை அளிக்கும் நோக்கில் அக்கலைச்சொல்லையே தரப்பாட்டுச் சொல்லாகத் தேர்வு செய்யலாம்.

இந்தக் கருவிநூல் தொகுப்பு இயந்திரப் பொறியியல் துறைக் கருத்துக்களைத் தமிழிலே தர விரும்பும் கட்டுரை ஆசிரியர்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது. அறிவியல் கட்டுரைகளை எழுதுவோர் குறிப்பிட்ட ஒரு கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஏற்கனவே வழக்கில் உள்ளதா அல்லது புதிதாக ஆக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவர். அதற்காக அவர்கள் அந்தத் துறையில் அதுகாறும் வெளிவந்துள்ள கலைச்சொல் தொகுதிகளையும் நூல்களையும் பார்வையிட வேண்டும். ஆனால் அந்த அனைத்துத் தொகுதிகளும் நூல்களும் அவர்களுக்கு ஒரு சேரக் கிடைக்கவும் வாய்ப்பியால. ஏனென்றால் அவற்றுள் பலவும்