பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

97


பிட்டுள்ளார்’ என யான் கூறியதும் மாணக்கர் அமைதியானார். இந்தியாவின் வட கோடியில் ஓர் அருணாசலப் பிரதேசம் இருப்பதை இன்று பலரும் அறிவர்.

6.2 ஸ்ரீ வில்லி புத்துர்

இனித் தென் புதுவைக்கு வருவோம்: புதுச்சேரி மாநிலப் புதுவைக்குத் தெற்கே இரண்டு புதுவைகள் உள்ளன. ஒன்று: பெரியாழ்வார் திருமொழியிலுள்ள பாடல் பகுதி ஒன்று ஈண்டு நோக்கத் தக்கது.

“செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புதுவை
விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாட வல்லார் கடல்
வண்ணன் கழலிணை காண்பார்களே” (3-3-10)

என்பது பாடல் பகுதி. தென் புதுவை = ஸ்ரீ வில்லிபுத்தூர். விட்டு சித்தன் = பெரியாழ்வார். (ஸ்ரீ வில்வி) புத்தூர் = புது ஊர். எனவே, இது மரூஉ மொழியாகப் புதுவை எனப்பட்டது. பெரியாழ்வார் இந்தப் புதுவையைத் தென் புதுவை என்று கூறியிருப்பது மிகவும் பொருத்தம். இதற்கும் தெற்கே எந்தப் புதுவையும் இல்லை. இது, புதுச்சேரி மாநிலப் புதுவைபோல் பெருவரவிற்றாகப் பேசப்படுவதில்லை. இனி மற்றொரு புதுவையைக் காண்போம்.

6-9. சடையன் புதுவை

தலைநகர்ப் புதுச்சேரியின் தெற்கே தஞ்சை மாவடத்தில் ஒரு புதுவை உள்ளது. இங்கே தான் சங்கரன் என்பவரும், அவர் மகன் சடையன் (சடையப்ப வள்ளல்) என்பவரும், சடையனின் மகன் சேதிராயன் என்பவரும் வாழ்ந்ததாகத் தனிப் பாடல்கள் கூறுகின்றன. இலங்கைத் தமிழ் மன்னன் பரராச சிங்கன் பாடிய தான பாடல் ஒன்று வருமாறு: