பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

101


பரராச சிங்கன், காவிரியோடும் சோழமண்டலத்தோடும் தொடர்புறுத்திச் சடையனைப் புகழ்ந்து பாடியுள்ளான். தென்னார்க்காடு மாவட்டத் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் இருந்திருந்தால் கப்பல் கப்பலாய் இலங்கைக்கு அரிசி அனுப்பியிருக்க முடியாது; காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவனா யிருந்ததாலேயே கப்பல் கப்பலாய் அரிசி அனுப்ப முடிந்தது.

எனவே, புதுவைச் சடையன் என்பதிலுள்ள புதுவை என்பது, தலைநகர்ப் புதுச்சேரியைக் குறிக்க வாய்ப்பேயில்லை. இந்த நிலையில், புதுவை மாநிலப் புதுவைக்குத் தெற்கே இரண்டு புதுவைகள் இருக்க, புதுவை மாநிலப் புதுவையைப் பாரதியார் தென்புதுவை என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் சிக்கலாகவும் குழப்பமாகவும் உள்ளது.

ஸ்ரீ வில்லிபுத்தூரைப் புதுவை என்பது அவ்வளவாகப் பொருந்தாததும் சிறுவரவினதுமாகும். ‘புதுவைச் சடையன்’ என்று கூறும் பாடல்களையும் பாரதியார் அவர் காவச் சூழ்நிலையில் அறியாதிருந்திருக்கலாம். அல்லது சடையனைத் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருவெண்ணெய் நல்லூரான் என்று எண்ணியிருக்கலாம். அதனால் அவ்விரண்டு புதுவைகளையும் பாரதியார் சுட்டாமல் புதுச்சேரி மாநிலப் புதுவையையே சுட்டியிருக்கலாம். அங்ஙனமெனில், இந்தப் புதுச்சேரிக்கு வடக்கே ஒரு புதுச்சேரி இருந்திருக்கவேண்டுமே?

6.6 செங்கைப் புதுச்சேரி

இது குறித்துப் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. ஒருநாள், இந்தியாவின் தலைமை அமைச்சராய் இருந்த திருமதி இந்திராகாந்தி செங்கற்பட்டு மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது, புதுச்சேரிப் பகுதிக்கும் சென்றதாக வானொலி அறிவிக்கக் கேட்டேன். பாரதியார் செங்கற்பட்டு