பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

103


இல்லாத அடைமொழிகளே இல்லை - எல்லாம் உலக வழக்கு-செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் இனச் சுட்டு உள்ளவையே என்பது அடியேனது கருத்து.

8.1 ஒத்துக்கு மத்தளம்

உரையாசிரியர்கள், செஞ்ஞாயிறு - வெண்டிங்கள், வட வேங்கடம் - தென்குமரி என்னும் பூச்சாண்டிகளைக்காட்டித் தொல்காப்பியருக்கும் நன்னூலாருக்கும் ஒத்துக்கு மத்தளம் அடித்துள்ளனர்.

செஞ்ஞாயிறு - வெண்டிங்கள், வடவேங்கடம் - தென்குமரி என்பன இனச் சுட்டு உள்ளனவே என்பது அடியேனது கருத்து. இதற்கு உரிய விளக்கமாவது:-

விண்வெளியில் உள்ள கோடிக்கணக்கான கோள்களுள் கண்கட்குப் பெரியனவாய்த் தெரிவனவும் நமக்கு நன்மை பயப்பனவாயும் உள்ள கோள்கள் ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டே. இவற்றுள் ஞாயிறு செந்நிறம் உடையது போலவும், திங்கள் வெண்ணிறம் உடையது போலவும் தெரிவதால் முன்னது செஞ்ஞாயிறு எனவும், பின்னது வெண் திங்கள் எனவும் இனச் சுட்டுள்ள அடைமொழிகளைப் பெற்றுள்ளன. செஞ்ஞாயிறு இல்லையெனில் திங்களை வெண் திங்கள் எனவும், வெண் திங்கள் இல்லையெனில் ஞாயிறை செஞ்ஞாயிறு எனவும் கூறியிருக்க மாட்டார்கள். வேறு ஞாயிறுக்கு மாற்றாகச் செஞ்ஞாயிறு எனவும், வேறு திங்களுக்கு மாற்றாக வெண் திங்கள் எனவும் கூறவில்லை. இவ்விரண்டுமே ஒன்றுக்கு ஒன்று மாற்றாகும்.

8.2 எல்லைகள்

அடுத்து, வடவேங்கடம் - தென்குமரிக்குச் செல்லலாம். தெற்கே ஒரு வேங்கடம் இருப்பதால் வடவேங்கடம் என்றும், வடக்கே ஒரு குமரி இருப்பதால் தென்குமரி