பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சுந்தர சண்முகனார்



“கசதப ஒழித்த ஈரேழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ரழவொழித் திரெட்டு
ஆகுமிவ் விருபான் மயக்கும் மொழியிடை
மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே” (55)

“ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே” (56)

“ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும்” (57)

“டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்” (58)
“ணனமுன் னினங் கசஞபமய வவ்வரும்” (59)

“மம்முன் பயவ மயங்கும் என்ப” (60)

“யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும்” (61)

“லளமுன் கசபவய ஒன்றும்மே” (62)

“ரழி அல்லன தம்முன் தாம் உடனிலையும்” (63)

“யரழ வொற்றின் முன் கசதபஙஞநம
ஈரொற்றாம் ரழத் தனிக்குறி லணையா” (64)

“லளமெய் திரிந்த னணமுன் மகரம்
நைந்தீ ரொற்றாம் செய்யு ளுள்ளே” (65)

“தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப” (66)

என்பன பவணந்தியாரின் நன்னூல் நூற்பாக்களாம். இவற்றிற்கு உரையும் எடுத்துக்காட்டும் தரின் விரியும். இருப்பினும், “கசதப ஒழித்த ஈரேழன் கூட்டம்” என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில் பின்வருமாறு சங்கர நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

2. சங்கர நமச்சிவாயர் உரை

“இவ்விடை நிலையை ஒருமொழி தொடர்மொழி என்னும் இரண்டினுங் கொள்ளாது ஒருமொழிக்கே எனக் கொள்வாரும் உளர். எவ்விடத்துவரினும், இரண்டெழுத்து இணங்கிப் பொருந்தும். பொருத்து வாயை இடைநிலை