பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

169


இலக்கியப் பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால் போதும் என்பதை ஒரு சிறிதளவுதான் ஒத்துக்கொள்ள முடியும். அதாவது, நடு நிலைப் பள்ளிவரையும் இலக்கணத்தை இலக்கியத்துடன் இணைத்துக் கற்பிக்கலாம். அதற்கு மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி - மேல்நிலைப்பள்ளி வகுப்புகளிலும் கல்லூரிகளிலும் தனிப்பாடமாகக் கற்பிப்பது இன்றியமையாததாகும். அவ்வளவு ஏன்? எல்லாநிலை வகுப்புகளிலுமே, வாய்ப்பு நேருங்கால், இலக்கியப் பாடத்தில் இலக்கண நுட்பங்களை எடுத்துக்காட்டிக் கற்பிக்கலாம். ஆனால், எல்லா இலக்கணச் செய்திகளையும் இலக்கியப் பாடத்தோடு இணைத்துக் கற்பிக்க முடியாதாதலின், இலக்கணம் தனிப்பாடமாகவே கற்பிக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

கருவிப் பாடம்

இலக்கணத்திற்கு இவ்வளவு இன்றியமையாமை தர வேண்டியதற்கு உரிய மற்றொரு சிறந்த காரணமும் உண்டு. மொழி ஒரு கருவிப் பாடம் (Tool Subject). அதாவது, கணக்கு, அறிவியல், வரலாறு, நில நூல் முதலிய எல்லாப் பாடங்களையும் மொழியின் வாயிலாகவே கற்பிக்கிறோம். கணக்கையும் கருவிப் பாடம் எனக் கூறுவதுண்டு. அறிவியல் முதலிய சில பாடங்களில் எண்கள் இன்றியமையா இடத்தைப் பெற்றிருப்பதால், கணக்கும் கருவிப் பாடமே. கணக்குக்கு அடிப்படையான எண்கள் எழுத்துக்களின் சுருக்கக் குறியீடேயாகும். எண்களை நாம் எழுத்தாலேயே ஒலிக்கிறோம். 999999999 என ஒன்பது முறை 9 என்னும் எண்ணை எழுதிவிட்டுப் படிக்க வேண்டுமாயின், “தொண்ணூற்றொன்பது கோடியே தொண்ணூற்றொன்பது இலட்சத்துத் தொண்ணூற்றொன்பது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது என எழுத்துகளாலேயே ஒலிக்கிறோம். எண்கள் சொற்களின் சுருக்