பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

175


 தொடர் நிகழ்காலம்

ஆங்கிலத்தில் They go என்பதற்கு, அவர்கள் போகிறார்கள் என்பது பொருள். இது, Present Tense - நிகழ்காலம் எனப்படும் They are going என்பதற்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள் இது, Present Tense continuous - தொடர் நிகழ்காலம் எனப்படும். இந்த ஆங்கில வழக்காறுகள் போல, கிறு - கின்று என்பன பெற்று நிகழ்காலத்தைக் குறிக்கும். ஆநின்று என்பது தொடர் நிகழ்காலத்தைக் குறிக்கும். இதற்கு இலக்கியச் சான்று காட்டினால்தான், இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படும். இலக்கிய அகச்சான்று இதோ:-

தேவார ஆசிரியர்கள் மூவருள் ஒருவராகிய நாவுக்கரசர் திருவானைக்கா தேவாரப் பதிகப்பாடல் ஒன்றில் இதனைக் கையாண்டுள்ளார்.

“எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்;
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை;
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்”-

என்பது பாடல் பகுதி. ஒருவர் இறந்து விடின், வேறு யாரும் தம் உயிரை விட்டு, இறந்தவரின் உயிருடன் துணை போக மாட்டார்கள். செத்த உடம்பாகிய பெருவிறகை, மரக்கட்டையாகிய சிறு விறகால் தீமூட்டிக் கொளுத்திச் செல்வர் - என்பது இதன் கருத்து. இங்கே, ‘செல்லா நிற்பர்’ என்பதை ஊன்றி நோக்க வேண்டும். சுடுகாட்டில் ஈமக் கடன்கள் முடித்த பிறகு, திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது, தொன்று தொட்டுப் பெரியவர்கள் பின்பற்றி வரும் வழக்கமாகும். (இப்போது திரும்பிப் பார்க்காமல் போனாலும், பின்பொருநாள் தாமாக வந்து தான் தீரவேண்டும்). திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற காரணத்தால் சென்று கொண்டே இருப்பார்கள் என்னும்