பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சுந்தர சண்முகனார்



இறுதியில் ‘ஐ’ பெற்றுவரும் சில சொற்கள்-பண்டைக் காலம், நேற்றைக் கூலி, அற்றைத் திங்கள்.

அப்பையன் - அந்தப் பையன், இப்பொருள் - இந்தப் பொருள் - அ, இ, சுட்டு.

எக்குதிரை - எந்தக் குதிரை - எ வினா.

முருகனைப் பார்த்தேன் - இரண்டாம் வேற்றுமை - ‘ஐ’ உருபு.

கண்ணனுக்குத் தந்தான் - நான்காம் வேற்றுமை - ‘கு’ உருபு.

பலாப்பழம், களாக்காய் - ‘ஆ’ ஈற்று மரப் பெயர்கள்.

ஈக்கூட்டம், தீப்புண் - ஈ இறுதித் தனி நெடில்.

மரம்+கிளை=மரக்கிளை, வட்டம்+பலகை=வட்டப் பலகை - இறுதி ‘ம்’ கெட நின்ற அகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள்.

கேட்டார்ப் பிணிக்கும் தகை - இரண்டாம் வேற்றுமைத் தொகையாக உள்ள உயர்திணைப் பெயர்கள். மேற் கூறியிருப்பனவற்றின் பக்கத்தில் வல்லெழுத்து வருமொழிவரின் இடையில் வல்லொற்று மிகும்.

வல்லொற்று மிகா இடங்கள்

இனி வல்லொற்று மிகா இடங்கள் வருமாறு:- நம்பிதந்தார், அறிஞர் சொன்னார்-என உயர்திணைப் பெயரின் பின் வலி மிகாது.

செய்து, என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களுள், பட்டுப் போயிற்று-விற்றுக் கொண்டான் என்பன போன்ற வன்றொடர்க் குற்றியலுகரங்களில் தவிர, மற்றபடி வந்து கற்றான், கொய்து சென்றான்-என மென்றொடர்