பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

சுந்தர சண்முகனார்


என்பது நூற்பா. ‘உம்’ (உம்மை) என்னும் இடைச் சொல்லுக்கு நன்னூலாரும் எட்டுப் பொருள்கள் கூறியுள்ளார்.

“எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம்முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே” (6)

என்பது நூற்பா.

தொல்காப்பியரும் நன்னூலாரும் ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கே ‘சிறப்பு’ என்னும் பொருள் உண்டு என்றுள்ளனர்; ‘ஏ’ என்னும் இடைச்சொல்லுக்குச் ‘சிறப்பு’ என்னும் பொருள் உண்டென அவர்கள் கூறிற்றிலர். ‘ஏ’ என்னும் இடைச்சொல்லும் ‘சிறப்பு’ என்னும் பொருள் தரும் என அடியேன் (சு. ச.) கூறுகிறேன். இதை விளக்க மீண்டும் ‘உன்னையே உடைய’ என்னும் தொடருக்கு வருவோம். இதற்கு, ‘நீயே என் முழு உடைமைப் பொருள்’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ தேற்றமாகும். ‘என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ பிரிநிலையாகும். மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன்’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ சிறப்பு ஆகும். தொல்காப்பியரும் நன்னூல் இயற்றிய பவணந்தியாரும் கூறாத சிறப்புப் பொருள் ‘ஏ’ என்னும் இடைச் சொல்லுக்கும் உண்டு என்பதுதான் அடியேனது புதுக் கண்டுபிடிப்பாகும். 

22. பதப் புணர்ச்சியும்
விகுதிப் புணர்ச்சியும்

1. சொல் புணர்ச்சி

‘பதப் புணர்ச்சியும் விகுதிப் புணர்ச்சியும்’ என்னும் தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. பழந்தமிழ்-புதிய