பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

203


தமிழ் என்பதும், பழந்தமிழ்ச் செய்திகளைப் புதிய தமிழ்க் கட்டுரையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே, தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களை நான் தொடப்போவதில்லை. அவற்றை அறவே மறந்து-அதாவது-அப்படியாக எந்த ஒரு நூலும் இல்லை என்பதாகக் கற்பனை செய்து கொண்டும் நான் சொந்தமாகப் புது இலக்கணம் படைப்பவன் என்பதாக எண்ணிக்கொண்டும் செய்தியைத் தொடங்குகிறேன். இது மட்டுமன்று; மொழியியல் என்னும் ஒன்று இருப்பதாகவும் எண்ணாமல் தொடங்குகிறேன்.

பதப் புணர்ச்சி என்பதைச் சொல் புணர்ச்சி என்றும், விகுதிப் புணர்ச்சி என்பதை இறுதிநிலைப் புணர்ச்சி என்றும் தமிழில் கூறலாம். சொல் (பதப்) புணர்ச்சி என்றால் எல்லா வகைப் புணர்ச்சிகளையும் தொட வேண்டி வரும். அதாவது-உயிரீற்றுப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி இன்ன பிறவற்றை எல்லாம் குறிப்பிடவேண்டும். இந்தப் புணர்ச்சிகளுள் சிலவற்றைப் பற்றி நெடுங்காலமாய் யான் எண்ணியிருந்த சில செய்திகளை இவண் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

புணர்ச்சி என்பது செயற்கையாகச் செய்து கொண்ட ஓர் ஏற்பாடு. இந்தச் சொல்லையும் அந்தச் சொல்லையும் இணைத்து எழுதும்போது, நடுவில் இன்னின்ன நிலைமைகள் ஏற்படலாம் என்று எண்ணி யாரும் தம் சொந்த முறையில் புணர்ச்சி இலக்கணம் வகுக்க வில்லை.

முதலில் எழுத்துகள், பின் எழுத்துகளால் ஆன சொற்கள், பின் சொற்களால் ஆன சொற்றொடர்கள் என்ற காரண காரிய முறை தொடக்கக் காலத்தில் இருந்ததில்லை. அதாவது, தொடக்கக் காலத்தில், மக்கள், அ....ம்....மா.....என எழுத்து எழுத்தாகப் பேசவில்லை;