பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சுந்தர சண்முகனார்


இவ்வைக்கிய நாட்டவை தோன்றியிருக்கிறது. இதனால் சிலருக்கு இது உருப்படுமோ என்னும் ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறநானூறு)

2000 ஆண்டுகட்கு முன்னேயே இக்கருத்து மக்கள் நெஞ்சத்தில் எழுந்திருக்கின்றது. மனிதன் முதன் முதலில் காட்டிலே வேட்டையாடித் திரிந்த அன்றே இக்கருத்து எழுந்தது என்று துணிந்து கூறலாம்.

சாதி மதம், கட்சிகள் இவை ஒழியவேண்டும். ஒழிந்தால் தான் உலகம் ஒரேயுலகமாக இருக்க முடியும். இதற்குத் துணிவுவேண்டும். ஒரே பொது மொழியினால் உலகம் முழுதும் ஆளப்பட வேண்டும்.

பொதுமொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும். (உலகப் பொதுமொழி) இன்று ஊருக்குப் போவதற்கு ஊர்திகளில் செல்கிறோம். ‘ஏன் நடந்துபோனால் என்ன? நடந்து போனால் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாமே! கிராமங்களைப் பார்த்துச் செல்லலாமே? இதனால் ஊருக்குப் போவதாயும் இருக்கும் - அத்துடன் பல கிராமங்களைப் பார்த்ததாகவும் இருக்குமே’ என்று யாரேனும் கேட்பாரேயாகில் முடிந்தால் நடந்து செல்லட்டும் அவர்கள்!

‘ஒரே உலகம்’ என்னும் கொள்கை உருப்படுமா?

உலக நாடுகள் எல்லாம் மொழிவாரியாகப் பிரிந்து ஒற்றுமையாக இருக்கலாம். இவ்வாறு செய்யின் ஒரேயுலகம் உருப்படும். வள்ளுவரும்,

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’
‘உலகந் தழீஇயது ஒட்பம்’