பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

37



ஒரே உலகத்திற்குத் தடைகளாக இருப்பவை

அன்று உலகம் விரிந்து இருந்தது. இன்று நெருங்கிச் சுருங்கியிருக்கின்றது. ஆனால் இச்சமயத்தில்தான் நாம் விலகியிருக்கிறோம். அதாவது, “இது எங்கள் நாடு - எங்களுக்கு உரிமை, நாங்கள் மற்றவர்களோடு சேர மாட்டோம்” என்றெல்லாம் கூறி விலகுகிறார்கள்.

கல்வி வளர வளர அறிவு வளர்ந்ததே யொழிய மனிதனுக்கு நல்ல பண்பாடு மட்டும் குறைந்து வருகின்றது. நகரத்தின் ஒரு வீட்டில் இரவில் சாவு என்றால் அது விடிந்து தான் தெரிந்து மற்ற வீட்டினர் பார்க்க வருவார்கள். ஆனால் கிராமத்தில் இந்நிலையில் ஒருபடி முன்னேற்றம் தான். இந்த அளவில் நெருங்கி உறவாடி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் பண்பு வளர்ந்தால்தான் உலகம் ஒரே உலகமாக இருக்கும்.

முயன்றால் ஒரே உலகத்தை உருவாக்க முடியும்!

சீட்டோ-நாட்டோ-ஆசியா ஆகிய நாடுகளெல்லாம் கூட்டு முறையில் இயங்கி வருகின்றன. காமன்வெல்த் - என்பதும் உள்ளது. இவற்றை யெல்லாம் நாம் மைல் கற்களாக நினைவு செய்து ஒரே உலகத்தை உண்டாக்குவோம். நாடுகட்கிடையே ஏற்படும் பொறாமை, பிணக்குகள் போன்றவற்றைத் தீர்த்து வைப்பதற்கு ஐக்கிய நாட்டவை உதவுகிறது.

இதற்கு முன்னே ‘உலக ஒற்றுமைக் கழகம்’ என்ற ஒன்று ஏற்பட்டுத் தோல்வி கண்டுவிட்டது. பொருளாதாரத் துறையிலே சமூகத்துறையிலே ஐக்கிய நாட்டவை உதவுகிறது. இரண்டாம் உலகப் போர் இட்லரால் தொடங்கு முன்னரே இவ்வொற்றுமைக் கழகம் தோன்றி மறைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான்