பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சுந்தர சண்முகனார்


ஆசிரியர்களேயாவர்: இந்த அடிப்படை நோக்கத்தில்தான், தேவாரப் பாடல்கள் ‘மூவர் தமிழ்’ என்னும் தொகைப் பெயர் பெற்றன.

இந்தப் பாடல்களை வெளிவரச் செய்து ‘திருமுறை கண்ட சோழன்’ என்னும் பட்டப் பெயரை இராசராச சோழன் தட்டிக் கொண்டான். பிற்கால மன்னர்கட்கு இத்தகைய தமிழ் உணர்வு இல்லாமற் போனது வருந்தத்தக்கது. 

8. கன்னல் தமிழும் கவியரசும்

“வெண்ணிலாவும் வானும் போலே
விரனும் கூர்வாளும் போலே

(வெண்ணிலாவும்)

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் யானும் அல்லவோ

(வெண்ணிலாவும்)

என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் ஒன்றின் முன் பாதியாகும். இந்தப் பாடலிலுள்ள ஒப்புமை நயங்கள் மிகவும் சுவைக்கத் தக்கன. அவற்றை ஒவ்வொன்றாய்க் காண்பாம்.

வெண்ணிலாவும் வானும்

நம் நாட்டில் அமாவாசையன்று இரவு முழுதும் நிலா ஒளி இல்லை. அடுத்த நாளிலிருந்து பருவம் வரையும் சிறிது சிறிதாக ஒளிகூட முழுநிலா ஒளி வீசும். அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒளி சிறிது சிறிதாகக் குறைய, அமாவாசை