பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சுந்தர சண்முகனார்



2.5 Ch. ஒலி

D என்னும் எழுத்து ஆங்கிலத்தில் ‘டி’ (டகர ஒலி) எனப்படும். இலத்தீன், பிரெஞ்சுமொழிகளில் ‘தெ’ (தகர ஒலி) எனப்படும் இந்த முறையில்தான் புது என்பது பிரெஞ்சில் Poudi எனப்பட்டது. நம்மக்கள் புதுச்சேரி என்பதைப் புதிச்சேரி எனத் திரிபாகக் கூறியதால், அவர்கள் du போடாமல் di போட்டனர். நம் ஊர்ப் பெயர்கள் பல, ஐரோப்பிய மொழிகளில் தவறாக எழுதப்படுவதன் காரணங்களுள் முதன்மையானது, நாம் கொச்சையாக ஒலித்து அறிவித்ததேயாகும்.

இந்த முறையில் du என்பது di ஆயிற்று. ‘ch’ என்பது, ஆங்கிலத்தில் Character (கேரக்டர்-பண்பு) என்பதில் ககர ஒலியும், charity (சாரிட்டி-அறம்) என்பதில் சகர ஒலியும் பெறுகிறது. இது போன்ற பச்சோந்தித்தனம் இலத்தீனிலும் பிரெஞ்சிலும் இல்லை, ch என்பது பிரெஞ்சு மொழியில் எங்கு வரினும் ‘ஷ்’ என ஷகர ஒலி மட்டுமே பெறும். எ. கா:- chat = ஷா (பூனை - t:Silent - ஒலி பெறா ஊமை எழுத்து). Dimanche-திமான்ஷ் (ஞாயிற்றுக் கிழமை) இதுபோலவே, Poudecheira (பு தெ ஷே யிரா) என ஃ ஆலந்து மொழியிலும் ch என்பது ஷகர ஒலி பெற்றுள்ளது. (பிரெஞ்சு மொழியில் ‘OU’ என்பது ‘உ’ என ஒலிக்கப்பெறும்).

ஆனால், ch என்பது இலத்தீன் மொழியில் எல்லா இடங்களிலுமே ககர ஒலியே பெறும். இதன் முன்னோடியான கிரேக்க மொழியிலும் இஃதே.

வீரமாமுனிவரைக் குறிக்கும் Beschi என்பது மற்ற மொழிகளில் பெஷி எனப்படும். இலத்தீனிலோ பெஸ்கியோ (Beschio) என ch ககர ஒலி பெறும். இலத்தீனில் Charus என்பதில் ‘க்காருஸ்’ (விலைமதிக்க வொண்ணாத) எனவும்,