உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ரசிகமணி டிகேசி


முடிந்தது. தமிழில் நல்ல உணர்ச்சியும் தேட்டமும் இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்ப் பண்டிதராய் இல்லாததுதான் என்று அவரிடம் சொன்னேன்.

கல்கியில் வந்திருக்கிற அவருடைய பாடல் நல்ல போக்கில் அமைந்திருக்கிறது. பாடலுக்கு உரிய சந்தத்தோடு பாடினால் தானே, ஹாசியபாவம் துலங்கும். அல்லாத பட்சம் மிஞ்சுவது கோணலான வசனந்தான். வெறும் வசனத்தையும் ஏதோ செய்யுள் போல வாசித்துக் குட்டிச்சுவர் பண்ணலாம். குட்டிச்சுவர் பண்ணியும் காட்டினேன்.

கவிகளை, கம்பர் கவிகளையே ஆசிரியர்கள் குட்டிச்சுவர் பண்ணுகிறார்கள். பிறகு கம்பராமாயணம் கட்டை மண்ணுதானே என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அதுவும், அதற்கு மேலும் வேணும். கம்பர் மாளிகைக்கு டிக்கெட்டுக் கிடையாது. அவர்களுக்கு ஒருநாளும் கிடையாது. அடைபட்ட மாளிகைதான்.

ஆனால் என்ன குறைஞ்சுபோச்சு. நன்றாய் ஊடாடித் திரியத்தான் சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, கந்தபுராணம், வில்லிபாரதம் எல்லாம் இருக்கே.

வாயில்லாப் பூச்சி என்று
வாத்தியாரை மூலையிலே
வைத்து விட்டார் .
எங்கள் காங்கிரஸ் மந்திரி - சொந்தச்
சம்பளத்தை
உயர்த்திக் கொண்டார் தந்திரி

எக்ஸ் ரங்கசாமிக்கு தமிழின் விஷயம் தெரிகிறதல்லவா பெரிய விஷயம்.