உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

123


இன்னொரு இட்லியையும் வாங்கிக்கொண்டார்கள். ஆனால் எண்ணெயின் விருத்தாந்தத்தைப் பரிசாரகர் சொல்லவில்லை. இங்குள்ள நல்லெண்ணெய் கொஞ்சம் குருடாயிலுடன் உறவாடிக் கொண்டிருக்கும்.

ஆகையால் நல்ல எண்ணெயாக அம்மாள் பார்த்து ஒரு டின்னோ முக்கால் டின்னோ இங்கே சதாசிவம் அவர்கள் விலாசத்துக்கு அனுப்பச் செய்யவேண்டும். டபேதாரைக் கொண்டு விலையும் இன்னதென்று தெரிவிக்கச் செய்யவேண்டும். வேண்டும் போதெல்லாம் அந்தவிதமாகப் பார்த்து அனுப்ப ஏற்பாடு செய்வோம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - 5.1.48 இரவு புறப்பட்டுத் திருச்சி போகிறேன். 6, 7 தேதிகளில் திருச்சியில் தங்கல் 8 காலை குற்றாலம் போய்ச் சேரவேண்டும்.

❖❖❖