பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் | 35

திருக்குற்றாலம் தென்காசி 5.6.50

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதம் கிடைத்தது. மிக்க சந்தோஷம். மாப்பிள்ளை நடராஜூக்குக் குணத்துக்குத் தக்கபடி உத்யோகம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடராஜூம் ராஜேஸ்வரியும் வாய்ப்பான தம்பதிகள். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல சேவை செய்ய ஆசை கொண்டவர்கள்.

முதல் முதலாக நடராஜ் குற்றாலத்துக்கு வந்திருந்தபோது கம்பரது பொருளாதார தத்துவத்தை எடுத்துச் சொல்ல நேர்ந்தது. நடராஜ் அபாரமாய் அனுபவித்தார். அன்று அவருடைய அன்பு எனக்குக் கிடைத்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் எல்லாம் வல்ல இறைவன் சகல பாக்யத்தையும் அருளுவானாக.

இருவருக்கும் என் ஆசியைத் தெரிவிக்கவேணும். விசாகப் பட்டணத்தில் எத்தனை மாசம் இருக்க வேண்டுமோ தெரியவில்லை. ராஜேஸ்வரி தஞ்சையில்தானே இருக்கிறாள். விசாகப்பட்டணத்துக்கு இப்போது போக வேண்டாந்தானே.

அவளுடைய குழந்தை முதலாக எல்லாரும் செளக்கியந்தானே. எல்லாருக்கும் என் அன்ட்.

மகாராஜன் அவர்கள் தென்காசி முனிசிபாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அடிக்கடி சந்திக்க முடிகிறது. என்ன வாய்ப்பு பார்த்தீர்களா. நாலு நாளாக மகாராஜன். வேலம்மாள், நடராஜ நாடார், புஷ்பம்மாள், தங்கை சண்பகத்தம்மாள், குலசேகரப்பட்டணம், சிவசுப்பிரமணிய பிள்ளை, ஜமந்துர் ராமசாமி ரெட்டியார், டிக்டிரிக்ட் ஜட்ஜ்