பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ரசிகமணி டிகேசி


பொருள்த்தக்கீர் என்ற பாடலை மகாராஜன் கேட்டுவிட்டுப் போனார்கள் தென்காசிக்கு. இரவெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த தாம். மறுநாள் கோர்ட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதும் வந்து ஒலித்துக் கொண்டிருந்ததாம். தமிழ் அப்படி அல்லவா ஒருவரைச் செய்யவேண்டும். அந்தப்பாடு தங்களையும்தான் படுத்தியிருக்கிறது. மிக்க சந்தோஷம். தமிழ்க் களஞ்சியம் வீணாய்ப் போகவில்லை. தமிழர்கள் காதைப் பிடித்து இழுக்கத்தான் செய்கிறது.

தெருத்தெருவாய்த் தங்களைத் தேடி அலைந்த மாதிரி இருக்கிறது. சுந்தரர் பாடல்.

தங்கள் கடிதத்தை வாசிக்கும்போது தங்களுக்குண்டான, அதிசயம் அதிர்ச்சி எல்லாம் எங்களுக்கும் உண்டாகிறது. அத்தனை உண்மையும் இயல்பும் தங்கள் அனுபவத்தில் இருக்கின்றன. மிக்க திருப்தி,

கலை மண்டப வேலை மும்முரமாய் நடத்துகிறீர்கள். பழநியப்ப பிள்ளை அவர்களுக்கு என் சந்தோஷத்தைச் சொல்ல வேண்டும். ‘; -

ஒரு பாடலும் விளக்கமும் எழுதி அனுப்புகிறேன். எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது. தாங்களோ சீக்கிரமே இங்கு வருகிறீர்கள். மிக்க சந்தோஷம். ராஜேஸ்வரி, மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லாருக்கும் என் அன்பு.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - தமிழை வியந்து பேசியிருக்கிறார் சென்னை கவர்னர். தமிழ்ப் பண்டிதர்களுக்கு ஞாபகம் ஊட்டி வாசிக்கச் சொல்லுங்கள்.