32
ரசிகமணி டிகேசி
ஆசிரியர்கள் வருத்தம் இதுதான். கவிக்குத் தமிழ் பாஷையும் அதன் பண்பும் போல் வாய்ப்புடையது கிடையாதுதான். நிற்க.
விளாத்திகுளம் சாமியவர்கள் இங்கே (மீனம்பாக்கத்தில் வீட்டில்) ஒருநாள் சுமார் அரைமணி நேரம் பாடினார்கள். எல்லாம் தமிழ்ப் பாட்டு, பாவம் உணர்ந்து பாடுகிறார்கள். அதனால் பாட்டுக்கு முக்கியமாக ராக விஸ்தாரத்துக்கு அபூர்வமாக நயம் ஏற்பட்டிருக்கிறது. The art heart is the dynamic mountain. இந்த உண்மை அவர்கள் சங்கீதத்தில் நன்றாய்த் தெரியவந்தன. சங்கீத உலகம் அவர்கள் சங்கீதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதில் வருத்தந்தான். ஆனாலும் வியப்பில்லை. ஆடம்பர வெற்றொலியி லேயே (தமிழாசிரியர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்). முழுகிப்போய் உள்ளவர்களுக்கு சாமியவர்கள் பாட்டை எப்படி அனுபவிக்க முடியும். ஆனால் இப்போது இங்கே சில சங்கீத உணர்ச்சியுடையவர்கள் அங்கீகரிக்க முன் வந்திருக்கிறார்கள். சந்தோஷமான காரியம் அது. இரண்டு நாளில் ஊருக்குத் திரும்புவதாகச் சொன்னார்கள். ரொம்ப விசாரித்தாக அவர்களிடம் சொல்லவேணும்.
நான் இன்று நேமத்தான்பட்டிக்கு (செட்டிநாடு ஸ்டேஷன்) ஊருணித் திறப்பு விழாவுக்காகப் போகிறேன். 27.10.39 அன்று அங்கிருந்து திருநெல்வேலி போகிறேன். பிறகு தென்காசி. ஒரு வாரத்தில் இவ்விடம் திரும்பிவர உத்தேசம்.
தங்கள் கடிதத்தை எல்லாரும் வாசித்து அனுபவித்தோம். தாங்கள் முறையிடுகிறீர்கள். அடிக்கடி கடிதம் எழுத முடியவில்லையே என்று. நானும் அதற்கு ஒப்பம் போடவேண்டியதுதான்.
குற்றாலத்தில் தாங்கள், நண்பர் கான்போர்டு உல்டிங்குக்கு ரொம்பவும் துணை செய்தீர்கள் என்று ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். ரொம்ப சந்தோஷம்.