உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

39


அனுபவித்தார்கள் (வியக்கா விட்டாலும்). சிதம்பரத்துக்கு அடிக்கடி வரவேணும் கம்பராமாயண வாசிப்பு நடத்த வேண்டும் என்று மாத்திரம் சொல்லிவிடவில்லை. வட்டத்தொட்டியின் கிளை ஒன்றை நிரந்தரமாக அமைத்துவிட்டார்கள். வட்டத்தொட்டி விசாலம் அடைந்து வருகிறது சந்தோஷமான காரியம் அல்லவா.

தாங்கள் கோயில்பட்டியிலிருப்பது ரொம்ப சந்தோஷமான காரியம். எப்படியும் 31.1.40 அன்று திருநெல்வேலிக்கு வருகிறேன். தங்களையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

செல்லையாவுக்கு இப்போது காய்ச்சல் ஒன்றும் இல்லை. உடல் தேறியிருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்காவது சலனம் இல்லாமல் நிம்மதியாயிருந்தால் உடம்பு பழைய நிலைக்கு வந்துவிடும். வைத்தியரும் அப்படியே சொல்லுகிறார்.

செல்லையாவும் அண்ணியும் தங்கள் பொங்கல் விசாரிப்பை ரொம்பவும் அனுபவித்துப் பாராட்டினார்கள்.

வீட்டில் அம்மாளுக்கு இப்போது உடம்பு தன்னிலைக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளும் செளக்கியந்தானே. தாங்களோ கட்டுமுட்டாய் உருண்டு திரண்டு இருக்கிறீர்கள்.

ரொம்ப சந்தோஷம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖