பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ரசிகமணி டிகேசி
ஏரோ, மீனம்பாக்கம்
13.10.41

அருமை பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிகச் சிரத்தை எடுத்து அனுப்பிய கர்ணாமிர்த சாகரத்திரட்டும் பால்நாடார் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் தங்கள் கடிதத்துடன் வந்தது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கம்பரைப் பற்றி ரொம்ப ஆர்வத்தோடு எழுதியிருக்கிறார்கள். பேரம் பண்ணவில்லை. வி.வி.எஸ். ஐயரைக் கொண்டு லத்தீன், கிரிக்கு, ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய பாஷைகளிலுள்ள ஒப்புயர்வற்ற கவிஞர்களைவிடக் கம்பன் மேல் என்று சொல்லுகிறார்.

இப்போது தமிழிசை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிற கோடையில் நம்முடைய கம்ப நண்பர்கள், கம்பருக்குத் தொண்டாற்றும் நண்பர்கள் கம்பருக்கு அங்கொரு சாட்டை இங்கொரு சாட்டை கொடுக்காமல் சும்மா இருக்க முடியுமா. முன்னமேயே ரா. ராகவய்யங்காரது வாகனத்துக்குத் தோள் கொடுக்கிறவர்கள், இனிமேல் கம்பரை, தமிழை, பாடங்களை, ஐயங்கார் பால் நாடார் அவர்களை, என்னை, ஜெயிலில் இருக்கிற சா. கணேசன் அவர்களை, உங்களைத் தான் குறைத்துப் பேசாமல் இருக்க முடியுமா? சீக்கிரத்தில் இந்தக் கூட்டத்தையெல்லாம் பாாக்கத்தான் போகிறோம். கம்பரைக் குறைப்பதற்காகவே செருகு கவிகளை எடுத்து அப்படியும் இப்படியும் சிலம்பம் விடவேண்டும். யாராவது அதில் சுவை இல்லையே என்று சொல்ல வேண்டும். உடனே கம்பனிலும் தமிழிலும் இதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்கலாமா என்று சொல்லி தமிழிசைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்கிறவர்களுக்குத் திருப்தி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். டிகேசி எக்ஸாஜ்ஜரேட் பண்ணுவார். தமிழ் பற்றியும் கம்பர் பற்றியும் என்று இதுவரை பிரசாரம் செய்துகொண்டு வந்தவர்கள் வெறும் வாயையா மெல்லுவார்கள். அவலை உழக்கு உழக்காக வாயில் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே.