பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

53


இதெல்லாம் பற்றித் தொந்தரவு பண்ணவேண்டாம். அவர்கள் சந்தோஷமாக புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டியது ரசமான பாடல்களாகப் பாடிப்பாடி அனுபவிக்க வேண்டியது. அனேகர் அப்படி அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நண்பர் நா. சிதம்பரம் அவர்கள் போன்ற இளைஞரின் உற்சாகத்தை வைத்துத்தான் கம்பரும் தமிழும் தங்களுக்கு உரிய உன்னத பதவியை அடைய வேண்டும்.

தங்கள் சீதா கலியாணம் நல்ல தோற்றுவாயாக அமைந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. மற்றவை நேரில்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖