பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 ரசிகமணி டிகேசி

ஈடுபாட்டைக் குறிக்கிறதே ஒழிய அகம்பாவத்தைக் குறிக்காது. ஈடுபாடுகளைச் சேர்ந்த உண்மை இது. ஆகையினால் யாரும் என்னோடு சண்டைக்கு வரக்கூடாது.

ஆனால் சண்டைக்கு வர காரணங்கள் பல இருக்கின்றன.

ஒன்று விறகுப் பஞ்சத்தை கவனியாது வேண்டாத காரியத்தைச் செய்துவிட்டேன் என்று புகார் சொல்லலாம். கம்பரை எரித்துப் பெரிய தீ வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கு எரிதுரும்பு குறைந்துவிட்டதே என்று வருந்துவதில் பொருள் இருக்கத்தானே செய்கிறது.

இரண்டு, கம்பரைப் படிக்க ஜன்மம் காணாதே என்று பயந்து அதைத் தொடாதே இருந்தவர்களை எல்லாம் கம்பரைப் படிக்கச் செய்து காலத்தை வீணாக்கச் செய்துவிட்டாய் என்று என்னை அதட்டலாம்.

மூன்று, நல்ல மலையாளத்து அப்பளம், வாயிலே போட வேண்டியது, பல்லைத் தொட வேண்டியது, அப்படியே பொருபொரு என்று தூளாய்ப் போய்விடும். 50 அப்பளத்தைத் தீர்த்துவிடலாம் என்று படும். நம்மிடம் வஞ்சம் இல்லை. போடுவார் இல்லை என்பதுதான். போட்டால் மாயமாய்ப் போய்விடும்.

அப்பேற்பட்ட அப்பளத்தில் இரண்டொரு மணலைத் தூவிவிட வேண்டும். அப்பளத்தைக் கடிக்கும்போது இதோ இருக்கிறேன் நான் என்று. கல் சொல்லிவிடும். பல்லின் பாட்டைச் சொல்ல வேண்டுமா, வேண்டாம். அப்பளக் கூடையில் வறுத்து வைத்த அப்பளம் அப்படியே இருந்துவிடும். மிச்சந்தான்.