பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

79


மாதிரி. பிறகு என்ன செய்கிறது. இங்கேயே இருக்கிறேன். சிகிச்சை நடக்கட்டும். டிக்கெட்டுகளைக் கொடுத்துப் பணத்தை வாபஸ் வாங்கி வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

குற்றாலத்தில் உள்ளவர்கள் வேண்டும் என்றே டிமிக்கி கொடுக்கிற ஆசாமி என்று என்னை எண்ணுகிறார்கள். ஆனால் விஷயம் எப்படி இருக்கிறதென்று பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா.

நாளை 24 ஆம் தேதி கானாடுகாத்தானுக்கு கல்கியும் நானும் போகிறோம். சி.வி.ஆர்.எம். அழகப்பச் செட்டியார் அவர்கள் வீட்டில் 26 ஆம் தேதி கலியாணம். 25 ஆம் பிற்பகல் சித்தனவாசல் போய்வர ஏற்பாடு செய்திருக்கிறோம். தாங்கள் சொன்னீர்கள் சித்திரம் எல்லாம் அழிந்துபோய்விட்டதாக. அகத்தியர் நூல் எல்லாம் போய்விட்டது. ஆனாலும் அகத்தியர் இருந்த இடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா. ஆகவே சித்திரம் இருந்த இடத்தைப் போய்ப் பார்த்து வருகிறோம்.

❖❖❖