உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இநமத எதிர்ப்பைக் காட்டவும் கிளைக்கதைகளைப் பயன் படுத்திக் கொண்டுள்ளார்.? இளங்கோவடிகளிடம் இப் போக்கு சிறிதும் இல்லை. 4.14 பௌத்தம் பேச எழுந்த காப்பியமான மணிமேக. லையில் புத்த ஜாதகக் கதைகளில் ஒன்று கிளைக்கதையாக எடுத்தாளப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று கிளைக்கதையின் பகுதியாக எடுத்தாளப் பட்டுள்ளது. ஆக, இவ்விரு காப்பீய ஆசிரியர்களும், தங் கள் தேவைக்கேற்ப, பிற நூற்கதைகளையும் தங்கள் காப்பி யத்தில் எடுத்தாண்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது. . 4.15 சிலப்பதிகாரக் கிளைக்கதைகள் அனைத்தும் முழுக்க முழுக்கக் கதைப்பகுதி உடையதாகவே அமைந்திருக்- ரும், மிகச் சில கிளைக்கதைகளில், நீதிக் கருத்துக்கள் வரிகளில் மட்டும் சொல்லப்பட்டிருக்கும். இளங்கோவடிகள் கதையை மட்டும் பேசி நீதியை உய்த்துணர வைக்கிறார். ஆனால், மணிமேகலையில் சாத்தனார், தான் கூறவந்த பௌத்தக்கருத்துக்களையும் நீதிக்கருத்துக்களையும் கிளைக் கதைகளில் வெளிப்படையாகவே பேசுகிறார். இதனால், சில கிளைக்கதைகளில் கதைப்பகுதியைக்காட்டிலும்,அறிவு. றுத்தும் பகுதி அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக சாதுவன் கதையில் கதைப் பகுதி மிகக் குறைவு. பௌத்த மதக்கொள்கையை அறிவுறுத்தும் பகுதி மிக நீண்டு காணப்ப படுகிறது. 4.16 சிலப்பதிகாரத்தில் நாளங்காடிப் பூதக் கதை யைக் காப்பியப் பாத்திரமல்லாத விஞ்சையன் கூறுவதாக. இளங்கோவடிகள் அமைத்துள்ளார். தவிர இக்கதையைக் காப்பியப் பாத்திரமல்லாத விஞ்சையன் காதலி சேட்பது போலவும் அமைத்துள்ளார். இப்படி, மணிமேகலையில் ஈதை கூறுபவரையும், கேட்பவரையும் காப்பியப் பாத்திர-