________________
102 மல்லாதவராகச் சாத்தனார் அமைக்கலில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4.17 சிலப்பதிகாரம். மணிமேகலை என்ற இக் மிகக் சாப்பியங்களில், பிற்காலக் காப்பியங்களைவிட குறைந்த அளவிலேயே புராணக் கதைகள் இடம் பெற்றுள்- சிலம்பு, மேகலை இரண்டிலுமே ஒரே ஒரு புராணக் கதையும், சிலம்பில் ஒரே ஒரு புராண வரலாற்றுக் கதையும் இடம் பெற்றுள்ளன. ·B 4.18 சிலம் மேகலை இரண்டிலுமே கோவலல்- கண்ணகியின் முற்பிறப்புக்கதை பேசப்படுகின்றது. ஆனால் சிலப்பதிகாரத்தில். இக்கதை ஓட்டிய கிளைக்கதையாகப் பயின்று வருகிறது. அதாவது, சிலம்பில் இக்கதையின் பயன் மாடு அதிகம். மணிமேகலையில் இக்கதை ஊன்று கிளைக் கதையாகவே படைக்கப்பட்டுள்ளது. சிலம்பின் கிளைக் ஈதையை அப்படியே சாத்தனார் எடுத்தாண்டாலும், தன் போக்கிற்கேற்ப அக்கதையிலும் பௌத்தம் பேசியுள்ளார். நிலம்பில் சமயத்தைப் பற்றிப்பேசாத கண்ணகியை, சாத்த- னார் சமயம் பற்றிப் பேசும் பாத்திரமாக மாற்றிப் படைத் துக் காட்டியுள்ளார். 4.19 சிலப்பதிகாரத்தில் காப்பியப் பாத்திரப் பெருமை ஊர்ப் பெருமை பேசும் கதைகள் எடுத்தாளப்படுகின்றன. ஆனால், மேசுலையில் இப்படி ஊர்ப் பெருமை பேசும் கதையோ, பாத்திரங்களை நேரடியாக உயர்த்திப் பேசப்- காயன்படும் கதைகளோ காணப்படவில்லை. 4.20 சிலப்பதிகாரம், மேகலை இரண்டிலுமே வரலாற் நுக் கதைகள் கிளைக் கதைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. சிலம்பில் பாண்டியன் பற்றிய வாலாற்றுக் கதைகளும், மேகலையில் சோழன் பற்றிய கதையும் கிளைக்கதைகளாக அமைந்துள்ளன.