________________
138 கிறார். சம்பாதி என்ற கழுகரசன் சடாயுவின் உடன் பிறந்த- இவன் வானுலகம் புகப் பறந்து சென்றபொழுது கதிரவன் சினத்திற்கு ஆளாகிச் சிறகு தீயப்பெற்றான். இக்- கதையைக் கம்பரா.யணம், ஆயுயர் உம்பர் நாடு காண்டும் எறைறிவு தள்ளி மீயுயர் விசும்பி னூடு மேக்குறச் செல்லும் வேளை காய்கதிர்க் கடவு' டேரைக் கண்ணுற்றும் கண்ணாறாமுன் தீயையுந் தீக்குந் தெய்வர் செங்கதிரச் செல்வன சீறி வெந்துமெய் யிறகுதீந்து விழுத்தனென் விளிகிலா தான் என்று சுருவமாகக் கூறுகிறது. 7.2.3 கவேரன் தவம் இருந்த வரலாறு காவிரி என்னும் திருநதியைத் தன் பெண்ணாகப் பெறத் தவம் இருந்தான் கவேரன் என்னும் மன்னன் என்று பௌ சாணிக மதம் கூறும்.3 இவ்வாறு, அவன் தவம் இருந்த இடம், பின்பு அவன் பெயராலேயே சுவேரவனம் என்று பெயர்பெற்றதாச் சாத்தனார் காட்டுகிறார். இக்கதையை மட்டும்தான் இவர் இரு இடங்களில் எடுத்தாண்டுள்ளார். கவேரன் பெற்றதால் அந்நதி காவிரி என்றும், காவிரி ஓடும் இடம் ஆதலால் சோழர் தலைநகரம் காவிரிப்பூர்பட்டினம் என்றும் பெயர்பெற்றதாகக் காப்பியப் புலவர் சுட்டுகிறார். 7.2.4 பிரத்தியும்நன் பேடிவடிவம் கொண்ட கதை . இக்கதை சிலப்பதிகாரத்திலும் துணைக்கதையாகம் பயின்று வந்துள்ளது. வாணாசுரனுடைய நகரமாகிய சோ என்னும் நகரத்தின் வீதியில், கணணனுடைய மகனும், காம்- னுடைய அவதாரமுமாகிய பிரத்தியும்நன் என்பவன், தன் மகனாகிய அநிருத்தனைச் சிறைவீடு செய்தல் பொருட்டு பேடி வடிவம் கொண்டு திரிந்தனள்.