________________
137 மொழிகளாக எடுத்தாள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மணிமேகலை பௌத்தம் பேச எழுந்த காப்பியம் ஆதலால், அதில். பிற சமயத்தினரின் பரவுமொழிப் பாடல்கள் இடம் பெறாததில் ஆச்சரியமில்லை. ஆனால் அடிகளைப் போல் எர்ணனை, எடுத்துக்காட்டு, பின்னணி விளக்கம். உவறை போன்ற உத்திகளில் துணைக்கதைகளைச் சாத்தனார் எடுத் தாண்டுள்ளார். 7.2 புராணம் பற்றிய துணைக்கதைகள் மணிமேகலையில் 83 கதைகள் புராணக்கதைகளாகப் பயின்று வந்துள்ளன. இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராண வரலாற்றைப் பேசுவன. சிலம்பைப் போல் திரும்பத் திரும்ப ஒரே கதை பல இடங்களில் பயின்று வருவதை மேக லையில் ஒரு இடத்தைத் தவிர மற்ற இடங்களில் காண முடியாது. 7.2.1 இந்திரவிழா எடுக்கப்பட்ட வரலாறு இக்கதை மற்றத் துணைக்கதைகளைக் காட்டிலும் முக்- கியத்துவம் வாய்ந்தது. 'இந்திரவிழா எடுப்பதிலிருந்து மணி மேகலை காப்பியம் தொடங்குகிறது பின்பு இவ்விழாக்கோள் மறக்கப்படுவதால் காப்பியக் கதை நடக்கும் இடமான புகார் அழிவுறுகிறது. இப்படிக் காப்பிய முக்கிய நிகழ்ச்சிக ளுடன் சம்பந்தப்பட்ட கதையாக இக்கதை திகழ்கிறது. நாவலந் தீவின் காவல் தெய்வமான சம்பாதி, அத்தீவிலுள் ளோரைக் காத்தல் வேண்டி அவர்களுக்கு வரும் தீங்கை நீக்குதல் பொருட்டு இந்திரனைக் குறித்து முதன்முதலாக விழாக்கோள் எடுத்தது என்பதே இக்கதைப் பொருள். 7.2.2 சம்பாதி சிறகிழந்த கதை வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த சம்பாதி
- .
என்று சம்பாதியின் கதையைச் சாத்தனார் எடுத்துரைக்