________________
148 7.3.7 நாளங்காடிப் பூதக்கதை முசுகுந்தன் என்னும் சோழ மன்னன், இந்திரனுக்கு உற்றுழி உதவச் சென்று, அமராபதியைக் காத்து நின்ற பொழுது, அசுரர்களின் இருட்கணை அவன் கண்ணை மறைத்த பொழுது, அவ்விடுக்கணை ஒரு பூதம் நீக்கியது பின்பு. அசுரர்களை வென்று, முசுகுந்தன் அமராவதியைக் காத்ததற்குப் பரிசாக அப்பூதத்தையே இந்திரன் அவனுக்கு நல்கினான். அதை அம்மன்னன் தன் தலைநகரான புகாரில் நாளங்காடியில் நிறுத்தி, அந்நகரின் காவல் தெய்வமாக்கி- னான். இக்கதை அடிகளால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்- டுள்ளது.24 ஆனால், அங்கு இக்கதை புகாரின் சிறப்பு பேசும் கிளைக் கதையாகப் பயின்று வந்துள்ளது. இவ்வாறு சாத்தனார் வரலாற்றுக் கதைகளையும். புராண வரலாற்றுக் கதைகளையும் துணைக் கதைகளாகப் பயன்படுத்தியுள்ளார். 7.4 நாட்டுப்புறத் துணைக்கதைகள் சாத்தனார். மேகலையில் இரண்டே நாட்டுப்புறக் கதைகளை எடுத்தாண்டுள்ளார். அவ்விரு கதைகளும்" பௌத்தக் கோட்பாடான காமமும் உயிர்க்கொலையும் கேடு விளைவிக்கும்' என்பதை விளக்க எழுந்தவைகளாகும். 7.4.1 காருக மடந்தையின் கதை ஆள்பவர் கலக்குற மயங்கிய ஒரு நாட்டில், பெண் ஒருத்தி, தன் கணவனாலும் கைவிடப்பட்டு, தான் ஈன்ற குழவியையும் கைவிட்டுத் தமியனாய் ஒரு ஊரில் சென்று வரைவின் மகளாய் வாழ்ந்தாள். அவனால் கைவிடப்பட்ட மகன், பார்ப்பனன் ஒருவனால், அவன் குழந்தை போல வளர்ச்சுப்பட்டான். அம் மைந்தன் ஒரு நாள் அவன் தான்